கோரக்பூர் மருத்துவமனையில் இந்த மாதத்தில் 290 குழந்தைகள் உயிரிழப்பு...!

First Published Aug 30, 2017, 4:51 PM IST
Highlights
In Baba Raghav Das Medical College Hospital in Gorakhpur 290 children have suffered a mental illness this month.


உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இந்த மாதத்தில் மட்டும் 290 குழந்தைகள் மூளை அழற்சி நோயால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதில் 213 குழந்தைகள் அலரஜி மற்றும் உடல் நலக்குறைவாலும், 77 குழந்தைகள் மூளை அளற்சி நோயாலும் இறந்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இந்த மருத்துவமனையில் மட்டும் குழந்தைகள் இறந்த எண்ணிக்கை 1,250 ஆக உயர்ந்துள்ளது.

கோரக்பூர், பாபா ராகவ் தாஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 13 ந் தேதி ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் மூளை அழற்ச்சி நோயால் 72 குழந்தைகள் இறந்தனர். இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து அங்கு பணியில் ஈடுபட்டு இருந்த இரு மருத்துவர்களை நீக்கி மாநில அரசு நடவடிக்கை எடுத்தது.

இதற்கிடையே குழந்தைகள் இறந்தது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க ஒரு குழுவை அமைத்து முதல்வர்ஆதித்யநாத் உத்தரவிட்டார்.

ஆனால், அதன்பின்பும், அந்த மருத்துவமனையில் குழந்தைகள் இறப்பது தொடர்ந்து வந்துள்ளது. கடந்த 48 மணிநேரத்தில் மட்டும் 73 குழந்தைகள் இறந்துள்ளது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பாபா ராகவ் தாஸ் மருத்துவக்கல்லூரி முதல்வர் பி.கே. சிங் கூறுகையில், “ கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து 1,250 குழந்தைகள், மூளை அழற்ச்சி, மஞ்சள் காமலை, நிமோனியா காய்ச்சல், தொற்று நோய் ஆகியவற்றால் சிகிச்சை பலன் அளிக்காமல் இந்த மருத்துவமனையில் இறந்துள்ளனர்.

கடந்த 27ந்தேதி மட்டும் 37 குழந்தைகளும், 28-ந்தேதி 26 குழந்தைகளும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் பரிதாபமாக இறந்தனர். ஆனால், 72 குழந்தைகள் இறக்கவில்லை

ஜனவரி மாதமத்தில் 152 குழந்தைகளும் , பிப்ரவரி மாதம் 122 குழந்தைகளும், மார்ச் மாதம் 159 குழந்தைகளும், ஏப்ரலில் 123 பேரும் இறந்துள்ளனர். 139 குழந்தைகள் மே மாதத்திலும், ஜூனில் 137 குழந்தைகளும், ஜூலையில் 128 குழந்தைகளும் இறந்துள்ளனர்.

குழந்தைளின் உடல் நிலை மிகவும் மோசமான நிலைக்கு சென்றபின்பு இங்கு வருவதால்தான் எங்களால் காப்பாற்றமுடியவதில்லை. உடல்நிலை சரியாமல்லமல் போகும் போதே எச்சரிக்கையாக இங்கு கொண்டு வந்து இருந்தால், காப்பாற்றி இருப்போம்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

click me!