நடுவானில் குவா.. குவா… விமானத்தில் பிறந்த குழந்தைக்கு அடித்தது லக்கி பிரைஸ்…வாழ்நாள் முழுவதும் இலவச பயணம்…

 
Published : Jun 19, 2017, 07:07 AM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
நடுவானில் குவா.. குவா… விமானத்தில் பிறந்த குழந்தைக்கு அடித்தது லக்கி பிரைஸ்…வாழ்நாள் முழுவதும் இலவச பயணம்…

சுருக்கம்

In Air jet ways flight a lady delivered a male child

சவுதி அரேபியாவில் இருந்து கொச்சி சென்று கொண்டிருந்த ஜெட் ஏர்வேய்ஸ் விமானத்தில் நடுவானில் கேரளாவைச் சேர்ந்த  இளம்பெண் ஒருவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தை தனது வாழ்நாள் முழுவதும் விமானத்தில் இலவசமாக செல்ல  ஜெட் ஏர்வேய்ஸ் நிறுவனம் சலுகை அறிவித்துள்ளது.

162 பயணிகளுடன் சென்ற ஜெட் ஏர்வேஸின் போயிங்-737 விமானம் ஒன்று சவுதி அரேபியாவின் தம்மாம் நகரில் இருந்து கொச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போதே, நிறைமாத கர்ப்பிணி பெண் ஓருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது,

உடனடியாக அந்த விமானம் மும்பை திருப்பப்பட்டது. ஆனாலும் விமான பயணிகளின் உதவியாலும், பயிற்சி பெற்ற துணை மருத்துவர் ஒருவர் இருந்ததாலும்  35 ஆயிரம் அடி உயரத்தில் அந்தக் பெண்ணுக்கு விமானத்தில் வெற்றிகரமாக பிரசவம் பார்க்கப்பட்டது. அதில் அந்த  பெண்ணுக்கு  ஆழகான ஆண் குழந்தை பிறந்தது. 

குழந்தை பிறந்ததும் அதன் தாய் மகிழ்ச்சி அடைந்தார்.. அதேபோல், ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக விமானத்தில் பிறந்த அந்த குழந்தை தனது வாழ்நாள் முழுவதும் விமானத்தில் இலவசமாக பயணத் செய்யலாம் என  சலுகை அறிவித்துள்ளது.

மும்பை விமானம் திரும்பியதும், குழந்தையும் தாயும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இருவரும் நலமுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

PREV
click me!

Recommended Stories

இந்திய வீரர்களுக்கு 'அந்த' பழக்கவழக்கம்! எனது கணவர் ஒழுக்கமானவர்.. ஜடேஜா மனைவி பகீர் குற்றச்சாட்டு!
பாகிஸ்தானின் டுபாக்கூர்தனம்..! ஏஐ டீப்ஃபேக் வீடியோக்கள் மூலம் போலியாக போரை உருவாக்கிய கடற்படை..!