பேய் மீது வழக்குப்பதியுங்கள்.. ‘விநோத புகார் கொடுத்த நபர்’ விசாரணைக்கு சென்ற போலீஸுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jul 01, 2021, 11:57 AM IST
பேய் மீது வழக்குப்பதியுங்கள்.. ‘விநோத புகார் கொடுத்த நபர்’ விசாரணைக்கு சென்ற போலீஸுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

சுருக்கம்

பேய்கள் தன்னை கொலை செய்துவிடுவேன் என மிரட்டுவதாக குஜராத்தில் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள விநோத சம்பவம் அரங்கேறியுள்ளது. 

குஜராத்தில் உள்ள பாஞ்ச்மஹல் மாவட்டம் ஜம்புகோடா தாலுகாவைச் சேர்ந்த ஒருவர் அங்குள்ள காவல் நிலையத்திற்கு மிகவும் பதற்றத்துடன் சென்றுள்ளார். அவரிடம் விசாரித்த போலீசாரிடம், தோட்டத்தில் தன்னை வேலை செய்ய விடாமல் இரண்டு பேய்கள் தொடர்ந்து தொந்தரவு கொடுப்பதாகவும், கொலை செய்து விடுவேன் என மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். 

மேலும் தன்னை கொன்றுவிடுவேன் என மிரட்டும் பேய்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கூறியதைக் கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் அவரது நிலையை புரிந்து கொண்ட போலீசார் வழக்கைப் பதிவு செய்வதாக சமாதானம் கூறியுள்ளனர். 

அதன் பின்னர் அந்த நபரின் குடும்பத்தினரை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை போலீசாருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அந்த நபர் மன நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும், கடந்த 10 நாட்களாக மாத்திரை எடுத்துக் கொள்ளாமல் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த குடும்பத்தினருக்கு அறிவுரை கூறிய போலீசார், அந்த நபரை அவர்களுடன் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை மிகவும் பொறுமையுடன் கையாண்ட போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 

PREV
click me!

Recommended Stories

நண்பேண் டா..! இந்தியாவுக்காக உதவ மீண்டும் முன்வந்த புடின்..! ரஷ்யாயாவுடன் பிளாக்பஸ்டர் ஒப்பந்தம்..!
இந்திய எல்லைக்குள் ஊடுருவிய ஜெய்ஷ்-இ-முகமது பெண்..! பாகிஸ்தானை அம்பலப்படுத்தப்போகும் ஷாஹ்னாஸ் அக்தர்..!