டிசம்பரில் இயல்பை விட கூடுதல் மழை பெய்யும்… முன்கூட்டியே எச்சரிக்கும் இந்திய வானிலை மையம்!!

By Narendran SFirst Published Dec 1, 2021, 8:27 PM IST
Highlights

டிசம்பர் மாதத்தில் இயல்பை விட கூடுதலாக மழை பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இயல்பாக தமிழ்நாட்டில் டிசம்பர் மாதத்தில் 18 செ.மீ மழை பெய்யக்கூடும். தற்போது அதிலிருந்து 132 சதவீதத்துக்கு மேல் என்ற அளவில் கூடுதலாக மழை பெய்யக்கூடிய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

டிசம்பர் மாதத்தில் இயல்பை விட கூடுதலாக மழை பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பல மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டு வீடுகளுக்குள் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அக்டோபர் 1 ஆம் தேதி முதல் இன்று வரை 63 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. இது இயல்பான 35 செ.மீ., அளவை விட, 80 சதவீதம் அதிகம். இந்த பருவ மழை காலத்தில் இதுவரை மயிலாடுதுறை 102; கடலுார் 108; விழுப்புரம் 110; செங்கல்பட்டு 111; சென்னை 113; நாகை 114; காரைக்கால் 144; புதுச்சேரி 141 செ.மீ., என, எட்டு மாவட்டங்களில் 100 செ.மீ.,க்கு மேல் மழை பதிவாகியுள்ளது. இரு மாநிலங்களிலும் அதிகபட்சமாக காரைக்காலில் 144 செ.மீ; இரண்டாவதாக புதுச்சேரியில் 141 செ.மீ., மழை பெய்துள்ளது. மூன்றாவதாக நாகப்பட்டினத்தில் 114 செ.மீ., மழை பெய்துள்ளது. சென்னையில் இந்த பருவ காலத்தில், 113 செ.மீ., மழை பெய்துள்ளது.

இது இயல்பான 61 செ.மீ., அளவை விட, 83 சதவீதம் அதிகம். கடந்த, 2015 ஆம் ஆண்டில் சென்னையில் அக்., - நவ., மாதங்களில் 161 செ.மீ., மழை பெய்தது. எனவே, வட கிழக்கு பருவ காலத்தில் 2015 மழை தான், இந்த ஆண்டை விட அதிகபட்ச மழையாகும். சென்னையில் இந்த ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி முதல் தற்போது வரை வரை 91 செ.மீ., மழை பெய்துள்ளது; 2015ல் 105 செ.மீ., வரை மழை பெய்தது. இதற்கு முன் 1918ல், 109 செ.மீ., மழை பெய்துள்ளது. எனவே, 1918க்கு பின், 2015 ஆம் ஆண்டு தான் அதிகபட்ச மழை பெய்துள்ளது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை காலத்தில் டிசம்பர் மாத நீண்டகால சராசரி அளவை விட இந்தாண்டு கூடுதலாக மழை பொழியும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்தியாவில் நடப்பு ஆண்டு பருவமழை நன்றாக பெய்து வருகிறது.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் நவம்பர் மாதம் கொட்டி தீர்த்தது. இந்த நிலையில், டிசம்பர் மாதத்தில் இயல்பை விட கூடுதலாக மழை பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 132 சதவீதத்துக்கு மேல் மழை பெய்ய கூடிய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வடகிழக்கு பருவமழை டிசம்பர் மாதத்திற்கான நீண்ட கால முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் இந்தாண்டு வடகிழக்கு பருவமழை டிசம்பர் மாதத்தில் நீண்ட கால சராசரியை விட கூடுதலாக பெய்யக்கூடிய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இயல்பாக தமிழ்நாட்டில் டிசம்பர் மாதத்தில் 18 செ.மீ மழை பெய்யக்கூடும். தற்போது அதிலிருந்து 132 சதவீதத்துக்கு மேல் என்ற அளவில் கூடுதலாக மழை பெய்யக்கூடிய வாய்ப்புள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. தற்போதைய வானிலை நிலவரப்படி, கடலின் வெப்பநிலை, இந்திய பெருங்கடலின் இரு துருவங்களுக்கு இடையே உள்ளது. இது தமிழகத்திற்கு மழை தரக்கூடிய சாதகமான நிலையில் உள்ளதால் டிசம்பர் மாதம் இயல்பை விட கூடுதலாக மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வும் மையம் அறிவித்துள்ளது.

click me!