இறந்த தந்தை உடலை அடக்கம் செய்ய காசு இல்லாமல் தவித்த சிறுவன்! கண்கலங்க வைத்த புகைப்படம்!! குவியும் நிதி உதவி!

By sathish kFirst Published Sep 18, 2018, 5:24 PM IST
Highlights

மேற்கு டெல்லியின் டாப்ரி என்னுமிடத்தில் சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த அனில் என்ற தொழிலாளி கடந்த வெள்ளிக் கிழமை பரிதாபமாக உயிரிழந்தார். 37 வயதான அனில் உயிரிழந்ததையடுத்து அவரையே நம்பி இருந்த அவரின் குடும்பம் நிற்கதியாய் நிற்கிறது

மேற்கு டெல்லியின் டாப்ரி என்னுமிடத்தில் சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த அனில் என்ற தொழிலாளி கடந்த வெள்ளிக் கிழமை பரிதாபமாக உயிரிழந்தார். 37 வயதான அனில் உயிரிழந்ததையடுத்து அவரையே நம்பி இருந்த அவரின் குடும்பம் நிற்கதியாய் நிற்கிறது. அனிலுக்கு ராணி என்ற மனைவியும், 11, 7, 3 வயதில் முறையே மூன்று குழந்தைகளும் உள்ளனர். 

வாடகை வீட்டில் வசித்து வந்த அவர்கள் அனில் உடலை அடக்கம் செய்யவே பணம் இல்லாமல் கஷ்டப்பட்டுள்ளனர். அனிலுக்கு இறுதி சடங்கை செய்யக்கூட அவர்கள் மக்களின் உதவியை எதிர்பார்த்தனர்.

இதனிடையே இறந்துகிடந்த அனிலின் உடல் அருகே அவரது மகன் கண்ணீருடன் நின்று அழுத புகைப்படம் ஒன்று இணையத்தில் வேகமாக பரவியது. 

பார்ப்பதற்கே கண்ணீரை வரவழைக்கும் அப்புகைப்படத்தை பலரும் தங்களது ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட பக்கத்தில் ஷேர் செய்தனர். அனிலின் குடும்பத்திற்கு உதவ சில என்ஜிஒ அமைப்பும் முன்வந்தன. இந்நிலையில் பொதுமக்கள் பலரும் சேர்ந்து ரூபாய் 17 லட்சம் வரை அனிலின் குடும்பத்திற்கு உதவியுள்ளனர். 

கிட்டத்தட்ட 880 பேர் தங்களால் முடிந்த பணத்தை அளித்து அனிலின் குடும்பத்திற்கு இந்த நிதியுதவியை வழங்கியுள்ளனர். இதனிடையே அனிலின் குடும்பத்திற்கு பணம் திரட்டும் பணியில் ஈடுபட்ட என்ஜிஒ-வை சேர்ந்த ஒருவர் கூறும்போது, குழந்தைகளின் பெயரில் திரட்டப்பட்ட பணம் ஃபிக்ஸட் டெபாசிட் செய்யப்படும் என்றார். மீதமுள்ள பணம் அனிலின் மனைவி கையில் வழங்கப்படும் என்றார்.
 

click me!