2022-க்கான IFFCO IIMCAA விருதுகள்… யார் யாருக்கு… வெற்றியாளர்களின் விவரங்கள் இதோ!!

Published : Mar 02, 2022, 06:01 PM ISTUpdated : Mar 02, 2022, 06:05 PM IST
2022-க்கான IFFCO IIMCAA விருதுகள்… யார் யாருக்கு… வெற்றியாளர்களின் விவரங்கள் இதோ!!

சுருக்கம்

மூத்த பத்திரிகையாளர்கள் சித்ரா சுப்ரமணியம் டுயெல்லா மற்றும் மதுகர் உபாத்யாய், பிரபல பரதநாட்டிய நடனக் கலைஞர் பத்மஸ்ரீ கீதா சந்திரன், ராகுல் சர்மா மற்றும் பார்த்தா கோஷ் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

டெல்லியில் உள்ள ஐஐஎம்சி தலைமையகத்தில் 6வது IFFCO IIMCAA விருதுகளின் வெற்றியாளர்களை IIMC முன்னாள் மாணவர்கள் சங்கம் அறிவித்தது. அதில், விளம்பரம், மக்கள் தொடர்பு உள்ளிட்ட 8 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. அதன்படி, மூத்த பத்திரிகையாளர்கள் சித்ரா சுப்ரமணியம் டுயெல்லா மற்றும் மதுகர் உபாத்யாய், பிரபல பரதநாட்டிய நடனக் கலைஞர் பத்மஸ்ரீ கீதா சந்திரன், ராகுல் ஷர்மா மற்றும் பார்த்தா கோஷ் ஆகியோர் இந்திய மக்கள் தொடர்பு கழக முன்னாள் மாணவர் சங்கத்தால் கௌரவிக்கப்பட்டனர். மேலும் அவர்களுக்கு 2022 ஆம் ஆண்டுக்கான IFFCO IIMCAA வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன.

2022ஆம் ஆண்டுக்கான விருது பெற்றவர்களின் பட்டியல்:

  • சித்ரா சுப்ரமணியம்: வாழ்நாள் சாதனையாளர் விருது
  • மதுகர் உபாத்யாய்: வாழ்நாள் சாதனையாளர் விருது
  • கீதா சந்திரன்: வாழ்நாள் சாதனையாளர் விருது
  • ராகுல் சர்மா: வாழ்நாள் சாதனையாளர் விருது
  • பார்த்தா கோஷ்: வாழ்நாள் சாதனையாளர் விருது
  • சௌரப் திவேதி: சிறந்த முன்னாள் மாணவர்கான விருது
  • அமித் குமார்: பொது சேவைக்கான விருது
  • ஷியாம் மீரா சிங்: ஆண்டின் சிறந்த முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைப்பாளர்களுக்கான விருது
  • அபினவ் பாண்டே: ஆண்டின் சிறந்த முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைப்பாளர்களுக்கான விருது
  • கர்நாடக அத்தியாயம்: ஆண்டின் சிறந்த இணைக்கும் அத்தியாயத்திற்கான விருது
  • 1994-95 குழு: ஆண்டின் சிறந்த இணைக்கும் குழுவுக்கான விருது
  • ஸ்ரீஷ்டி ஜஸ்வால்: சிறந்த விவசாய அறிக்கைக்கான விருது
  • கிருஷ்ணா என் தாஸ்: ஆண்டின் சிறந்த பத்திரிகையாளருக்கான (பத்திரிகை) விருது
  • அஜாதிகா சிங்: ஆண்டின் சிறந்த பத்திரிகையாளருக்கான (ஊடகம்) விருது
  • எடிகலா பவானி: ஆண்டின் சிறந்த இந்திய மொழி நிருபருக்கான (பத்திரிகை) விருது
  • ஜோதிஸ்மிதா நாயக்: இந்த ஆண்டின் சிறந்த இந்திய மொழி நிருபருக்கான (ஊடகம்) விருது
  • கௌஷல் லகோடியா: ஆண்டின் சிறந்த தயாரிப்பாளருக்கான (ஊடகம்) விருது
  • முனி சங்கர்: ஆண்டின் சிறந்த மக்கள் தொடர்பாளருக்கான விருது
  • விபின் தியானி: ஆண்டின் சிறந்த விளம்பரதாரர்கான விருது

IFFCO IIMCAA விருதுகள் 2022 ஜூரியின் சிறப்புக் குறிப்புகளின் பட்டியல்:

  • ஷஷ்வதா குண்டு சௌத்ரி மற்றும் ரஷ்மி மிஸ்ரா: விவசாய அறிக்கை
  • ஆயுஷி ஜிண்டால்: விவசாய அறிக்கை
  • சுபாஜித் ராய்: ஆண்டின் சிறந்த பத்திரிகையாளர் (பத்திரிகை)
  • சாரதா லஹாங்கீர்: ஆண்டின் சிறந்த பத்திரிகையாளர் (பத்திரிகை)
  • சுந்தரேஷா சுப்ரமணியன்: ஆண்டின் சிறந்த பத்திரிகையாளர் (பத்திரிகை)
  • தேஜ் பகதூர் சிங்: ஆண்டின் சிறந்த பத்திரிகையாளர் (ஊடகம்)
  • அபிமன்யு குமார்: ஆண்டின் சிறந்த மக்கள் தொடர்பாளர்

மேலும் இந்த நிகழ்ச்சியில் பேசிய ஐஐஎம்சி இயக்குநர் பேராசிரியர் சஞ்சய் திவேதி, ஐஐஎம்சியின் மாணவர்கள் இல்லாமல் இந்திய இதழியல் வரலாறு முழுமையடையாது என்று குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் கோல்டன் ஜூபிலி முன்னாள் மாணவர் குழு (1971-72) மற்றும் வெள்ளி விழா முன்னாள் மாணவர் குழு (1996-97) ஆகியோரும் பாராட்டப்பட்டனர்.

PREV
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!