
இந்திய விமான படை வேலையில் சேருவதற்காக இளைஞர்கள் பலர் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். ஆனால், உடம்பில் டாட்டு வரைந்திருந்தால் விமான படையில் சேர முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
விமான படையில் சேருவதற்கான தனது பணி நியமன ஆணை நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
அவர், உடம்பில் டாட்டு வரைந்திருந்தார். இதனால், அவரது பணி நியமனம் ரத்து செய்யப்பட்டிருந்ததாக விமானப்படை தெரிவித்திருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஹிமா கோஹ்லி, ரேகா பள்ளி ஆகியோர் கொண்ட அமர்பு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
பச்சை குத்துவது போல் உடலில் டாட்டு வரைந்திருந்தால் வேலை கிடையாது என இந்திய விமானப்படை ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.