கார்களில் "சைடு மிரர்" இல்லையென்றால் அபராதம்..! வருகிறது கடுமையான சட்டம்...!

First Published Jul 9, 2018, 7:27 PM IST
Highlights
if we dont use the car side mirror penalty will be applicable


கார்களில் சைடு மிரர் இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டில், இந்தியாவில் மட்டும் இந்தியாவில் 55  கோடி வாகனங்கள் உள்ளதாக கணக்கில் வந்துள்ளது. இந்த மூன்று ஆண்டுகளில் மேலும் கார்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கும்

இந்நிலையில் கார்களின் எண்ணிக்கை எந்த அளவிற்கு அதிகரித்து உள்ளதோ..அந்த அளவிற்கு விபத்துக்களும் அதிகரித்து உள்ளது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு பல்வேறு  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

மேலும் முறையாக கார் ஓட்ட தெரியாதவர்களுக்கு கூட, ஆர்டிஓ அலுவலக ஊழியர்கள் லஞ்சம் பெற்று ஓட்டுனர் உரிமம் கொடுத்து விடுகின்றனர்.

இந்நிலையில் விபத்துகளை கட்டுப்படுத்தும் பொருட்டு, கார்களின் பக்க வாட்டில் உள்ள சைடு மிரர்களை பயன்படுத்த வேண்டும் என்றும், அதனை பலரும் மூடி வைத்து விட்டு கார் இயக்குவதால் பின் பக்கமாக வரும் வாகனங்களை பார்க்காமல் விபத்துகளை ஏற்படுத்துகின்றனர் என்ற  புள்ளிவிவரமும் தெரியவந்துள்ளது

இதன் காரணமாக இனி, கார்களில் சைடு மிரர் பயன்படுத்த வில்லை என்றால் அவர்களுக்கு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று, இருசக்கர வாகனத்தை பயன்படுத்துபவர்களும், சைடு  மிரர்களை பயன்படுத்தாமல் இயக்குகின்றனர். இனி இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் சைடு மிரர்களை பயன்படுத்த வேண்டும் என்ற  நிலை ஏற்படும்.

மேலும் தற்போது கார்களில் உள்ள சைடு மிரர்களை பயன்படுத்த வில்லை என்றால்  அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு  உள்ளது. இதன் மூலம் அதிகமாக ஏற்படும் விபத்துகளை தவிர்க்க முடியும் என கூறப்படுகிறது.

click me!