கேரளாவில் மட்டும்தான் இப்படி இருக்காங்க.... பஞ்சரான அரசு பஸ்சின் டயரை மாற்றிய ஐ.ஏ.எஸ். அதிகாரி

First Published Aug 20, 2017, 12:29 PM IST
Highlights
ias officer changed the bus tyer


கேரள அரசு போக்குவரத்துக் கழகத்தின் தலைவராகவும், மேலாளன் இயக்குநரான ஐ.ஏ.எஸ். அதிகாரி, பஞ்சராகி சாலையில் நின்ற அரசு பஸ்சுக்கு டயரை மாற்ற உதவிய சம்பவம் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

கேரள அரசு போக்குவரத்துக் கழகத்தின் தலைவராக இருப்பவர் ராஜமாணிக்கம். ஐ.ஏ.எஸ். அதிகாரியான ராஜமாணிக்கம் முதுநிலை பொறியியல் பட்டதாரி ஆவார்.

இந்நிலையிலையில் கடந்த வியாழக்கிழமை திருவனந்தபுரம் அருகே அனையரா எனும் இடத்தில் அரசு பஸ் பஞ்சராகி சாலை ஓரம் நின்றுவிட்டது. பயணிகள் அடுத்தபஸ்ஸுக்காக காத்திருந்தனர். டிரைவரும், நடத்துனரும் பஸ்சின் டயரை மாற்றும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குநர் ராஜமாணிக்கம், அனையரா போக்குவரத்து பணிமனையில் ஆய்வை முடித்துவிட்டு தனது வாகனத்தில் கடந்து சென்றார். சாலையில் அரசு பஸ் நின்று இருப்பதைப் பார்த்து, இறங்கி வந்து டிரைவரிடம் விசாரணை செய்தார்.

பஸ் பஞ்சராகி நின்று இருப்பது குறித்து கேட்டறிந்த ராஜமாணிக்கம், போக்குவரத்து பணிமனையை தொடர்ந்து உடனே பொறியாளர்களை வரக்கூறி உத்தரவிட்டார். அவர்கள் வருவதற்குள்ளேயே, ராஜமாணிக்கமும் பணியில் இறங்கினார்.

டிரைவர், நடத்துனருடன் சேர்ந்து, பஸ்ஸின் டயரை மாற்றும் பணியில்ராஜமாணிக்கம் ஈடுபட்டார். அதற்குள் போக்குவரத்து பணிமனை ஊழியர்களும் வந்துவிட்டனர். தான் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி, அதிலும், போக்குவரத்து துறைக்கு தலைவர் என்பதை கர்வத்தை மறந்து, தானே களத்தில் இறங்கி பஸ்சின் டயரை மாற்றி.‘லீவரை’ பிடித்து ராஜமாணிக்கம் ‘டைட்’ வைக்கத் தொடங்கினார்.

அதிகாரி ராஜமாணிக்கம் உள்ளிட்ட அனைவரும் கூட்டாக வேகமாக பணியாற்றியதால், அடுத்த 15 நிமிடங்களில் மாற்று டயர் பொருத்தப்பட்டு பஸ்புறப்பட்டது. ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜமாணிக்கத்தின் செயலுக்கு மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

click me!