gang rape: ஹைதராபாத் கூட்டுப்பலாத்கார வழக்கில் 2-வது நபர் கைது: சிறுவன் கைது?: தெலங்கானா போலீஸார் அதிரடி

Published : Jun 04, 2022, 10:36 AM IST
gang rape: ஹைதராபாத்  கூட்டுப்பலாத்கார வழக்கில் 2-வது நபர் கைது: சிறுவன் கைது?: தெலங்கானா போலீஸார் அதிரடி

சுருக்கம்

Hyderabad gang-rape shocker: Second accused arrested :தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் 17வயது சிறுமியை கூட்டுப்பலாத்காரம் செய்த வழக்கில் 2-வதாக தேட்டப்பட்டுவந்தவரையும் போலீஸார் இன்று கைதுசெய்துள்ளனர்.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் 17வயது சிறுமியை கூட்டுப்பலாத்காரம் செய்த வழக்கில் 2-வதாக தேட்டப்பட்டுவந்தவரையும் போலீஸார் இன்று கைதுசெய்துள்ளனர்.

இந்த வழக்கில் கைப்பற்றப்பட்ட கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்ததில் 5 பேருக்கு தொடர்பு இருப்பதை போலீஸார் கண்டறிந்தனர். அதில் 3 பேர் சிறுவர்கள். இதில் இருவரை போலீஸார் இதுவரை கைதுசெய்துள்ளனர்.

சிறுமி கடத்தல் பலாத்காரம்

கடந்த மாதம் மே 28ம் தேதி, ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் 17வயது சிறுமி, 5 பேரால் சிவப்பு நிற சொகுசு காரில் கடத்தப்பட்டார். இந்த ஜூப்ளி ஹில்ஸ் பகுதி முழுவதும் வசதியானவர்கள், பெரும் பணக்காரர்கள் வசிக்கும் பகுதியாகும். இந்த சிறுமியை கடத்திச்சென்ற 5 பேரும் பப்பிற்கு அழைத்துச்சென்றுவிட்டு, அங்கிருந்து ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச்சென்று பலாத்காரம் செய்து தப்பினர்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை ஹைதராபாத் போலீஸில் புகார் செய்தார். இதையடுத்து, போலீஸார் சிறுமி காரில் கடத்தப்பட்ட பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்ததில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரும் சிறுவர்கள் எனத் தெரியவந்தது. 

கூட்டுப்பலாத்காரம்

அந்த சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டதில் சிறுமி கூட்டுப்பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் ஐபிசி 376 பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவத்தில் முதல் கட்டமாக ஒருவரை போலீஸார் கைதுசெய்து நிலையில் 2-வது நபரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். 

 2 பேர் கைது

இதுகுறித்து போலீஸ் துணை ஆணையர் ஜோயல் டேவிஸ் அளித்த பேட்டியில் “ கூட்டுப்பலாத்கார வழக்கில் இதுவரை 2 பேரைக் கைது செய்துள்ளோம். கண்காணிப்பு கேமிராவில் 5 பேர் பதிவாகியிருந்தனர். விசாரணையில் 3 பேர் சிறுவர்கள் எனத் தெரியவந்தது. இதில் 2 பேரை கைது செய்திருக்கிறோம்.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி ஏதும் சொல்லமுடியவில்லை. ஒருவர் பெயரை மட்டும் அந்த சிறுமி தெரிவித்தார். அதைத் தொடர்ந்து சிறப்புப்படை அந்த நபரைக் கைது செய்துள்ளது. சிசிடிவி கேமிரா காட்சிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதை ஆய்வு செய்ததில் 5 பேரில் இதில் ஈடுபட்டுள்ளதும் அதில் 3 பேர் சிறுவர்கள் எனத் தெரியவந்துள்ளது. வழக்கை போக்ஸோ சட்டத்தில் மாற்றியிருக்கிறோம். விசாரணையில் அந்த சிறுமி எதையும் கூரும் நிலையில் இல்லை.

சிறுவன் கைது?

மைனர் சிறுவன் இருக்கும் இடத்தையும் கண்டுபிடித்துவிட்டோம். இரவு நேரத்தில் சிறுவனைக் கைது செய்யக்கூடாது என்பதால், 3-வது நபரும் இன்றும் கைது செய்யப்படுவார். இந்த வழக்கில் விசாரணை நடந்து வருகிறது. இதில் எந்த நபருக்கு தொடர்பு இருந்தாலும், அவர் எந்த பின்புலத்தைக் கொண்டவராக இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் கைது செய்வோம்” எனத் தெரிவித்தார்

PREV
click me!

Recommended Stories

அமெரிக்கா, சீனாவுக்கு இணையாக இந்தியா வளர 30 ஆண்டுகள் ஆகலாம்: ரகுராம் ராஜன்
மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆரம்பம்! அதிகாரிகளை நியமிக்க மத்திய அரசு உத்தரவு!