பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள அயோத்தி ராமர் கோவிலில் வரும் 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு கோயில் கருவறையில் மூலவர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி ராமருக்கு தங்க பாதுகையை காணிக்கையாக செலுத்த ஐதராபாத்தைச் சேர்ந்த ராம பக்தர் 8 ஆயிரம் கிலோ மீட்டர் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள அயோத்தி ராமர் கோவிலில் வரும் 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு கோயில் கருவறையில் மூலவர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் சல்லா ஸ்ரீநிவாச சாஸ்திரி (65). ஓய்வு பெற்ற வருமானவரித்துறை அதிகாரியான இவர் தீவிர ராமர் பக்தர். அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு ரூ.65 லட்சம் செலவில் ஒரு கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளியில் தங்க பாதுகையை (தங்க காலணி) காணிக்கையாக செலுத்த உள்ளார்.
இதையும் படிங்க;- நாகர் பாணி கட்டடம்.. 5 மண்டபங்கள்.. அயோத்தி ராமர் கோயிலின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?
வனவாசத்தின்போது உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் இருந்து தமிழ்நாட்டின் ராமேசுவரத்துக்கு ராமர் வந்த வழியை ஆராய்ச்சி செய்து கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம் 20-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திலிருந்து துவங்கி உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி நோக்கி 8 ஆயிரம் கி.மீ. தங்க பாதுகையை தலையில் சுமந்து கொண்டு பாதையாத்திரை மேற்கொண்டு வருகிறார். தற்போது உத்தரபிரதேசத்தின் சித்திரக்கூட மாவட்டத்தைச் சென்றடைந்துள்ளார். அங்கிருந்து அயோத்தி நகரம் 272 கி.மீ. தொலைவில் உள்ளது. அடுத்த 2 வாரங்களில் அயோத்தியை சென்றடைந்து ராமர் கோயிலுக்கு தங்க பாதுகையை காணிக்கையை முதல்வர் யோகி ஆதி்த்யநாத்திடம் ஒப்படைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க;- ராமர் கோயில் கட்டும்போது இதுதான் மிகப்பெரிய சவாலாக இருந்தது: நிருபேந்திர மிஸ்ரா தகவல்!
இதுதொடர்பாக சல்லா ஸ்ரீநிவாச சாஸ்திரி கூறுகையில்;- எனது தந்தை தீவிர அனுமன் பக்தர். அயோத்தி கர சேவையில் அவர் பங்கேற்றார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பது எனது தந்தையின் நீண்ட நாள் ஆசையாக இருந்தது. ஆனால், அவர் இப்போது இல்லை. எனவே அவரது கனவை நனவாக்க விரும்புகிறேன்.
ஸ்ரீ ராமர் வனவாசத்தின் போது அயோத்தியிலிருந்து ராமேசுவரம் சென்ற வழியை ஆராய்ச்சி செய்து கண்டறிந்தேன். அவ்வழியே எனது பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறேன். ஏற்கனவே ராமர் கோயில் கட்டுமான பணிக்கு 5 வெள்ளி செங்கற்களை நன்கொடையாக வழங்கினேன். வரும் 22-ம்தேதி குடமுழுக்கு நடைபெறுகிறது. இதையொட்டி ராமருக்கு தங்க பாதுகையை காணிக்கையாக வழங்க முடிவு செய்து ரூ.65 லட்சம் செலவில் தயார் செய்து கணிக்கையாக கொண்டு செல்கிறேன் என தெரிவித்துள்ளார்.