தெலங்கானா மாநிலத்தில் ஒன்றரை வயது குழந்தையை தெருநாய் கவ்வி இழுத்துச் சென்ற சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், குழந்தை சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் புறநகர் பகுதியான ஜவஹர் நகர் குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 18 மாத குழந்தை ஒன்று தனது வீட்டின் முன்பாக விளையாடிக் கொண்டு இருந்தது.
ஜம்முவில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்கள்; சொந்த ஊரில் கண்ணீர்மல்க இறுதி மரியாதை
undefined
அப்போது அங்கு கூட்டமாக வந்த தெருநாய்கள் குழந்தையை கவ்வி இழுத்துச் சென்றன. நாய்கள் ஒவ்வொன்றாக ஆக்ரோஷத்துடன் குழந்தையை தாக்கியதில் குழந்தை படுகாயம் அடைந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் தெரு நாய்களை விரட்டி குழந்தையை மீட்டனர். இதனைத் தொடர்ந்து குழந்தை உடனடியாக ஹைதராபாத்தில் உள்ள காந்தி அரசு மருத்துவமனையில் குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது.
முரண்டுபிடிக்கும் தமிழக அரசு; மாநிலத்திற்கான ரூ.2 ஆயிரம் கோடியை நிறுத்திய மத்திய அரசு
எனினும் தலை, முகம், கால் என உடல் முழுவதும் பலத்த காயமடைந்த குழந்தை சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தது. 18 மாத குழந்தையின் மரணத்தால் உறவினர்கள் மட்டுமல்லாது அப்பகுதியே மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் ஹைதராபாத்தின் ஆம்பர் பேட் பகுதியில் தெருநாய் தாக்கியதில் 2 வயது சிறுவன் படுகாயமடைந்த நிலையில் தற்போது ஒரு குழந்தையின் உயிரே பறிபோன சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.