கள்ளக்காதலனுடன் பெண் ஓட்டம்..! மனைவியை மீட்டுத் தருமாறு வடிவேலு பட பாணியில் 2 கணவர்களும் போலீசில் கதறல்

Published : Jun 10, 2022, 10:12 AM ISTUpdated : Jun 10, 2022, 10:14 AM IST
கள்ளக்காதலனுடன் பெண் ஓட்டம்..! மனைவியை மீட்டுத் தருமாறு வடிவேலு பட பாணியில் 2 கணவர்களும் போலீசில் கதறல்

சுருக்கம்

தனது இரண்டு கணவர்களை விட்டு விட்டு புதிதாக கிடைத்த  காதலனோடு ஓடிய பெண்ணை, மீட்டு தருமாறு அந்த பெண்ணின் இரண்டு கணவர்கள் காவல்நிலையத்தில் அழுது புலம்பிய சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

கணவன்களை விட்டு ஓடிய இளம்பெண்

தமிழ் சினிமாவில் வடிவேலு காமெடி ரசிகர்களால் எப்போதும் கொண்டாடப்பட்டு வரும், அந்த வகையில் வடிவேலு ஒரு படத்தில் போலீசாக நடித்து இருப்பார், அப்போது புதிதாக திருமணம் செய்த கொண்ட ஜோடி காவல்நிலையத்தில் அடைக்கலம் தேடி வருவார்கள் அவர்களிடம் வடிவேலு என்ன பிரச்சனை என கேட்பார் அப்போது அந்த புதுமணப்பெண்  தனது கணவன்கள் தன்னை துரத்துவதாக தெரிவிப்பார். இதனையடுத்து அந்த காவல்நிலையத்திற்குள் அந்த பெண்ணின் 3 கணவன்மார்களும் வந்துவிடுவார்கள், எப்படியாவது என்னுடன் சேர்த்து வையுங்கள் என கணவன்கள் காவல்நிலையத்தில் கெஞ்சுவார்கள். அப்போது சீட்டு குலுக்கி அந்த சீட்டில் வரும் பெயர் கொண்ட நபரோடு செல்ல அந்தபெண் செல்ல வேண்டும் என வடிவேலு கூறுவார். இந்த காட்சி திரைப்படத்தில் நகைச்சுவைக்காக எடுக்கப்பட்டது. ஆனால் இது போன்ற சம்பவம் ஒன்று உண்மையாகவே நடந்து போலீசாரையே அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

காவல்நிலையத்தில் கதறிய கணவன்கள்

மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் நடைபெற்றுள்ளது. முதல் கணவரோடு ஏற்பட்ட பிரச்சனையால் இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்து அவருடன் வாழ்ந்து வந்துள்ளார். அப்போது மிஸ்டு கால் மூலம் பழக்கமான நபரோடு அந்த பெண்ணுக்கு மீண்டும் காதல் மலர்ந்துள்ளது. இதனையடுத்து தனது இரண்டு குழந்தைகளையும் விட்டு விட்டு அந்த பெண் இளம் காதலரோடு ஓடியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இரண்டாவது கணவன், அந்தபெண்ணின் முதல் கணவரை தேடிப்பிடித்து அவரோடு காவல்நிலையம் சென்று அழுது புலம்பி உள்ளார். தனது மனைவி தன்னை ஏமாற்றி சென்றதாகவும், வாழ்ந்தால் அவருடன் தான் வாழ்வேன் தயவு செய்து தனது மனைவியை மீட்டு தாருங்கள் என கோரிக்கை வைத்துள்ளார். இந்த புதுவித கோரிக்கையால் அதிர்ச்சி அடைந்த போலீசார் என்ன செய்வது என்று தெரியாமல் தலையை பிய்த்து கொண்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்

திருமணத்தில் கலந்து கொண்டால் பைக் பரிசு..! விருந்தினருக்கு இலவசமாக பைக் வழங்கி அசத்திய மணமக்கள்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Bus fares: விமானத்தில் மட்டுல்ல இனி பேருந்திலும் போக முடியாது போல.! பிளைட் டிக்கெட் ரேட்டிற்கு உயர்ந்த பேருந்து கட்டணம்.!
Check Mate: மோடியுடன் புதின் குடித்த பாயாசத்தால், கலங்கிய அமெரிக்க அதிபரின் அடிவயிறு...! இந்தியாவை முக்கிய கூட்டாளி என அறிவித்த டிரம்ப்.!