மனைவியை சொந்த தம்பிக்கு திருமணம் செய்து வைத்து அழகு பார்த்த அற்புத கணவர்..!

Asianet News Tamil  
Published : Jan 07, 2018, 05:58 PM ISTUpdated : Sep 19, 2018, 01:47 AM IST
மனைவியை சொந்த தம்பிக்கு திருமணம் செய்து வைத்து அழகு பார்த்த அற்புத கணவர்..!

சுருக்கம்

husband made her wife to marry his own brother after got divorce

மனைவியை தம்பிக்கு திருமணம் செய்து வைத்து அழகு பார்த்த நிகழ்ச்சி பீகாரில் நடந்துள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ள பகல்பூரில் வசிப்பவர் பவன் கோஸ்வாமி. இவருக்கு  கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் பிரியங்கா என்பவருடன் திருமணம்  நடைபெற்றது.

இந்த தம்பதியினருக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை கூட உள்ளது.

தற்போது டெல்லியில் வசித்து வரும் பவன் மற்றும் பிரியங்கா உடன்,  பவனின் தம்பி ஷாஜன் என்பவரும் கூட்டு குடும்பமாக அவர்களுடனே வசித்து வந்துள்ளார்.

சில ஆண்டுகளாகவே ஷாஜனுக்கு வேலை இல்லாமல் இருந்துள்ளது. அப்போது வீட்டிலேயே இருந்த ஷாஜன் பிரியங்காவுடன் நெருங்கி பழகி உள்ளார்.

இவர்களுடையை உறவு முறை பற்றி தெரிய வந்த பவன், பிரியங்காவிற்கு விவாகரத்து கொடுத்து  தன்னுடைய தம்பிக்கே மீண்டும் திருமணம் செய்து வைத்துள்ளார்.

இந்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது குறித்து பிரியங்கா தெரிவிக்கும் போது, தான் ஷாஜனை தீவிரமாக  காதிபதாகவும், தன் குழந்தை ஷாஜனை தான் இனி அப்பா என  அழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் .

இந்த செயல் பலருக்கு கோபத்தை ஏற்படுத்திய நிலையில், ஒரு சிலர் புது தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

இந்தியா முழுவதும் இரட்டிப்பாகும் ரயில்களின் எண்ணிக்கை.. அஷ்வினி வைஷ்ணவ் சூப்பர் அறிவிப்பு..!
பள்ளிகள் மாணவர்களுக்கு செய்தித்தாள் வாசிப்பு கட்டாயம்! உ.பி. அரசு அதிரடி உத்தரவு!