துப்பாக்கி லைசன்ஸ் வாங்குவது எப்படி? அதன் நடைமுறைகள் என்னென்ன?

Published : Mar 16, 2025, 11:52 AM ISTUpdated : Mar 17, 2025, 08:52 AM IST
துப்பாக்கி லைசன்ஸ் வாங்குவது எப்படி? அதன் நடைமுறைகள் என்னென்ன?

சுருக்கம்

தனி நபர் தங்கள் பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்திருக்க முடியும், அதற்காக லைசன்ஸ் வாங்குவது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

How to Apply for gun License in India : இந்தியாவில் துப்பாக்கி உரிமம் பெறுவது சுலபமானது அல்ல. பல கட்டுப்பாடுகளுடன் தான் துப்பாக்கி உரிமம் வழங்கப்படும். இது தற்காப்பு, விளையாட்டு, மற்றும் பயிர் பாதுகாப்பு போன்ற முக்கிய காரணங்களுக்காக மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. துப்பாக்கி உரிமம் பெறுவதற்கு சில முக்கிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும், மேலும் அதனைப் பிறகு பல்வேறு விசாரணைகள் நடத்தப்படும். அது என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

1. விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
  
   துப்பாக்கி உரிமம் பெற விரும்பும் நபர் பின்வரும் ஆவணங்களை உரிய அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்:
   - அடையாள சான்று
   - வருமான வரிச் சான்றிதழ்
   - இருப்பிட சான்றிதழ்
   - தொழில் விவரங்கள்
   - வங்கி கணக்கு அறிக்கை
   - ஆடிட் அறிக்கை
   - சொத்துப் பட்டியல்
   - மனநல சான்றிதழ்
   - மிரட்டலின் வினா வரையறுக்கப்பட்ட காவல்துறை எஃப்.ஐ.ஆர். நகல் 

2. என்னென்ன விசாரணை நடைபெறும்?

விண்ணப்பங்கள் கிடைத்தபின், மாவட்ட அலுவலகம் பல்வேறு விசாரணைகளை முன்னெடுக்கப்படும். இதில், விண்ணப்பதாரரின் துப்பாக்கி வாங்க விரும்பும் காரணம் மற்றும் எதிர்நோக்கிய அச்சுறுத்தல்கள் பற்றி விவரங்கள் சேகரிக்கப்படும். மேலும், அவர் மீது ஏற்கனவே கிரிமினல் அல்லது சிவில் புகார்கள் இருந்தால், துப்பாக்கி உரிமம் அவர்களுக்கு நிராகரிக்கப்படும்.

3. புதுப்பிப்பது எப்படி?  

துப்பாக்கி உரிமம் மூன்று வருடங்களுக்குப் பிறகு மறுபடியும் புதுப்பிக்க வேண்டும். இந்தக் காலத்துக்குப் பிறகு, உரிமத்தை நீட்டிக்க, காவல்துறையால் நற்சான்றிதழ் தேவைப்படுவதாகும். அதேபோல் உரிமம் பெற அனுமதி கிடைத்த மூன்று மாதத்திற்கு துப்பாக்கியை வாங்க வேண்டும்.

4. எத்தனை துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பயன்படுத்தலாம்?

துப்பாக்கி உரிமம் பெற்ற நபர், அதிகபட்சம் மூன்று துப்பாக்கிகளை வைத்திருக்க முடியும். தோட்டாக்கள் வாங்குவதற்கு, ஒரு ஆண்டில் 100 தோட்டாக்கள் வரை வாங்க அனுமதிக்கப்படுகின்றது. துப்பாக்கி அல்லது தோட்டாக்கள் எப்போது பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கான பொறுப்பு முழுவதையும் உரிமம் பெற்ற நபர் ஏற்க வேண்டும்.

5. துப்பாக்கியை சரண்டர் செய்வது எப்படி?

அனுமதி வாங்கியவர்கள் துப்பாக்கி ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் மட்டுமே வைத்திருக்க முடியும். வேறு மாநிலங்களுக்கு செல்லும்போது, காவல்துறையின் அனுமதி அவசியம். வெளிநாட்டுக்கு செல்லும் போது துப்பாக்கியை ஒப்படைப்பதற்கான வழிமுறைகளும் உள்ளன. நிரந்தரமாக துப்பாக்கியை சரண்டர் செய்ய விரும்புவோர், அதற்காக வாங்கிய லைசென்ஸை காவல் நிலையத்தில் சரண்டர் செய்ய வேண்டும். அதன்பின்னர் அதற்கான சான்றிதழை பெற்றுக்கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்... அரசு மானியத்துடன் புது வீடு கட்டலாம்! அரசுத் திட்டங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

PREV
click me!

Recommended Stories

நாடாளுமன்றம் வரை சென்ற திருப்பரங்குன்றம்..! டெல்லியிலும் புயலை கிளப்பும் திமுக!
Putin in India: புதினுக்கு பகவத் கீதையை பரிசாக வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி