#Breaking:Electricity tariffs Pondicherry : வீட்டு உபயோக மின் கட்டணம் உயர்வு.. அரசு அதிரடி அறிவிப்பு

By Thanalakshmi VFirst Published Jan 13, 2022, 5:49 PM IST
Highlights

புதுச்சேரியில் வீட்டு உபயோகத்திற்கான மின்சார கட்டணத்தை உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு கொள்முதல் செய்யும் மின்சாரத்தின் விலை உயர்ந்துள்ளதையடுத்து மின்கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. 
 

புதுச்சேரியில் வீட்டு உபயோகத்திற்கான மின்சார கட்டணத்தை உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு கொள்முதல் செய்யும் மின்சாரத்தின் விலை உயர்ந்துள்ளதையடுத்து மின்கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. 

இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒரு மாதத்திற்கு 0-100 யூனிட் வரை பயன்படுத்தினால் ஒரு யூனிட்க்கு 1 ரூபாய் 56 காசுக்களாக இருந்த கட்டணம், 1 ரூபாய் 90 காசுகளாக உயர்ந்துள்ளது. அதே போல் 101 முதல் 200 யூனிட் வரை பயன்படுத்தினால் ஒரு யூனிட்க்கு 2 ரூபாய் 60 காசுகளாக இருந்த கட்டணம், 2 ரூபாய் 75 காசுகளாகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சிறு விவசாயிகளுக்கு நிரந்தர கட்டணம் 11 ரூபாயிலிருந்து 20 ரூபாயாக்கு உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற விவசாயிகளுக்கு நிரந்தர கட்டணம் 50 ரூபாயிலிருந்து 75 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் குடிசைகளுக்கான மின்கட்டணத்தில் மாற்றம் ஏதுமில்லை என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. உயர் அழுத்த தொழிலகத்திற்கு யூனிட் ஒன்றிற்கு ரூ05.30 லிருந்து ரூ5.35 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
 

click me!