மாநிலங்களவையின் மரியாதையை உறுப்பினர்கள் காக்க வேண்டும் என்றும் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் வழியனுப்பும் விழா பேசிய துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டார்.
மாநிலங்களவையின் மரியாதையை உறுப்பினர்கள் காக்க வேண்டும் என்றும் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் வழியனுப்பும் விழா பேசிய துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டார். தற்போது துணைக் குடியரசுத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக் காலம் வரும் 10 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதை அடுத்து புதிய துணைக் குடியரசுத் தலைவராக ஜகதீப் தன்கா் தேர்வாகியுள்ளார். அவர் வரும் 11 ஆம் தேதி பதவியேற்கவுள்ளார். இந்த நிலையில், மாநிலங்களவையில் வெங்கையா நாயுடுவுக்கு வழியனுப்பும் விழா இன்று நடைபெற்றது.
இதையும் படிங்க: தெலங்கானா குழந்தைக்கு ரூ.16 கோடி மருந்து இலவசம்: மனிதநேயத்துடன் உதவிய மருந்து நிறுவனம்
இதில் பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்று பாராட்டு தெரிவித்தனர். அப்போது பேசிய வெங்கையா நாயுடு, மாநிலங்களவைக்கு அதிக பொறுப்புகள் உள்ளது. உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவை பார்த்துக் கொண்டிருக்கிறது. மாநிலங்களவையின் மரியாதையை உறுப்பினர்கள் காக்க வேண்டும். கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். துணைக் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் என்னிடம் தெரிவித்த போது, என் கண்களில் கண்ணீர் வந்தது.
இதையும் படிங்க: டீசல் தட்டுப்பாடு.. அரசு பேருந்துகள் சேவை திடீர் நிறுத்தம் - பொதுமக்கள் பாதிப்பு !
இந்தப் பொறுப்பை கட்சி எனக்கு அளித்ததால், கட்சியிலிருந்து ராஜினாமா செய்தேன். கட்சியைவிட்டு செல்வதால் கண்ணீர் வந்தது. அவையை சிறப்பாக வழிநடத்த என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு, வடகிழக்கு என எல்லா தரப்புக்கும் வாய்ப்பளிக்க முயற்சித்தேன். உங்கள் ஒவ்வொருவருக்கும் நேரம் கொடுக்கப்பட்டது. நாம் எதிரிகள் அல்ல, போட்டியாளர்கள். போட்டியில் மற்றவர்களை முந்துவதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். ஆனால், மற்றவர்களை வீழ்த்தக்கூடாது. நாடாளுமன்றம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். உங்களின் அன்பிற்கும், பாசத்திற்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.