குஜராத்தில் இன்று உலகளாவிய முதலீட்டாளர்கள் உத்வேக உச்சி மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைத்துப் பேசினார். அப்போது 2047ல் இந்தியா வளர்ந்த நாடாக உயர்வது முழுக்க அரசின் பொறுப்பு என்று தெரிவித்தார்.
குஜராத்தில் இருக்கும் காந்திநகரில் இன்று பத்தாவது உலகளாவிய முதலீட்டாளர்கள் உத்வேக உச்சி மாநாடு 2024-ஐ பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்த மாநாட்டுக்கு முன்னதாக நேற்று பிரதமர் மோடிக்கும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சையத் அல் நஹ்யான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த மாநாட்டின் தலைமை விருந்தினராக அதிபர் முகமது பின் சையத் அல் நஹ்யான் கலந்து கொண்டு இருந்தார்.
இந்த மாநாட்டுக்கு இடையே திமோர் அதிபர் ஜோஸ் ராமோஸ் ஹோர்டா மற்றும் மொசாம்பிக் அதிபர் ஃபிலிப் ஜசிண்டோ நியுசி ஆகியோருடன் பிரதமர் மோடி இருதரப்பு சந்திப்புகளை நடத்தினார். அதைத் தொடர்ந்து மகாத்மா மந்திரில் சர்வதேச நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை சந்தித்துப் பேசினார்.
undefined
இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சின் சிறப்புக்கள்:
* உலகில் இன்று இந்தியா பெரிய பொருளாதாரத்தை கொண்டு இருக்கும் நாடு. பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா உலக பொருளாதாரத்தில் 11வது இடத்தில் இருந்தது. வரும் ஆண்டுகளில் உலகின் மூன்று பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியாவும் இடம் பெற்று இருக்கும் என்று பல்வேறு ஏஜென்சிகள், அமைப்புகள் கணித்து வருகின்றன. இவர்கள் அனைவரும் தங்களது கணிப்புகளை வெளியிடட்டும். நான் உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறேன், இது நடந்தே தீரும்.
குஜராத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு: கவுதம் அதானி!
* உலக சூழ்நிலைகளை நாம் அனைவரும் அறிவோம். எனவே, இதுபோன்ற நேரங்களில் இந்தியப் பொருளாதார வெளிப்பாடு, வளர்ச்சி இவ்வளவு வேகத்தைக் காட்டுகிறது என்றால், இதற்குப் பின்னால் கடந்த 10 ஆண்டுகளில் கட்டமைப்புச் சீர்திருத்தங்களில் நாம் கவனம் செலுத்தியது ஒரு பெரிய காரணம். இந்த சீர்திருத்தங்கள் இந்திய பொருளாதாரத்தின் திறன் மற்றும் போட்டியை மேம்படுத்தியுள்ளன.
* இந்தியாவின் துறைமுக உள்கட்டமைப்புகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிறுவனங்கள் பில்லியன் டாலர்களில் புதிய முதலீடுகளுக்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
* இந்தியா ஸ்திரத்தன்மையுடன் இருக்கிறது. இதைத்தான் இன்று உலகம் உற்று நோக்கி வருகிறது. நம்பிக்கை வைக்கக் கூடிய ஒரு நண்பர், மக்களை மையப்படுத்திய வளர்ச்சியில் நம்பிக்கை கொண்ட ஒருவர், உலகளாவிய தெற்கில் இருந்து நம்பிக்கையான குரல், உலகப் பொருளாதாரத்தில் வளர்ச்சி, தீர்வுகளைக் கண்டறியும் தொழில்நுட்ப மையம், திறமையான இளைஞர்களைக் கொண்ட மையம் மற்றும் ஜனநாயகம் மட்டுமே ஸ்திரத்தன்மையை வழங்க முடியும்.
வைப்ரண்ட் குஜராத் உலக உச்சிமாநாடு 2024 : ஐக்கிய அரபு அமீரக அதிபர் முகமது அல் நஹ்யான் உரை..
* இந்த உச்சி மாநாட்டில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சையத் பங்கேற்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. குஜராத் உச்சி மாநாட்டில் அவர் தலைமை விருந்தினராக கலந்து கொண்டது இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையே எப்போதும் வலுப்பெறும் உறவுகளின் அடையாளமாக இருக்கும்.
* இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்தது. இப்போது, அடுத்த 25 ஆண்டுகளுக்கு தனது இலக்கை நோக்கி இந்தியா செயல்பட்டு வருகிறது. சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் நேரத்தில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை நாங்கள் கொண்டுள்ளோம். எனவே, இந்த 25 ஆண்டுகாலம் இந்தியாவின் அமிர்த காலமாகும். இந்த அமிர்த காலத்தில் நடைபெறும் முதல் குஜராத் உலக உச்சி மாநாடு இதுவாகும். எனவே, இது இன்னும் முக்கியமானது. இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்கும் 100க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள், இந்தியாவின் இந்த வளர்ச்சிப் பயணத்தில் முக்கியமான பங்காளிகளாக இருப்பார்கள்.