
தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு மாத காலமாகவே மிதமான மழையும்,ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்து வந்தது.
இந்நிலையில் கடந்த வாரம் ஆந்திராவில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளபெருக்கு தற்போது,22 தடுப்பணைகளையும் மீறி,தமிழக பாலாற்றில் பெருக்கெடுத்து ஒடுகிறது.
இதனிடையே, பெங்களூரில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை விடிய விடிய விடாமல் கொட்டித் தீர்த்தது. இதனால் நகரில் பல இடங்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆங்காங்கே மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்து விழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்பட்டுள்ளது மட்டுமின்றி, இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரில்பல பகுதிகள் மழை காடாக மாறி உள்ள நிலையில், இதுவரை 10 கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
குறிப்பாக பெங்களூருவின் மேற்கு பகுதியில் கடுமையான சேதம் ஏற்பட்டது.மேலும் இந்த கனமழை காரணமாக தமிழக ஆறுகளில் மேலும் வெள்ளபெருக்கு அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது