ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டது சூரத் நீதிமன்றம். இதனைத் தொடர்ந்து அவரிடம் இருந்த மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது
அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்திருந்தார். இந்நிலையில் நாளை குஜராத் உயர் நீதிமன்றம் அந்த வழக்கு குறித்த தீர்ப்பை அளிக்க உள்ளது. ராகுல் காந்தி இந்த சட்டப் போராட்டத்தில் வெற்றி பெறுவாரா? அல்லது தண்டனை பெறுவாரா? என்ற பதட்டம் இந்தியா முழுவதும் எழுந்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது, கர்நாடகாவில் உள்ள ஓர் இடத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "அது எப்படி திருடர்கள் அனைவரும் மோடி என பெயர் சூட்டுகிறார்கள்" என கேள்வி எழுப்ப அது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
இதையும் படியுங்கள் : தேசியத் தலைவர் பதவியில் இருந்து சரத் பவாரை நீக்கிய அஜித் பவார்..!
இது அவதூறு எழுப்பும் விதமாக இருந்தமையால், ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் இறுதியில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி உத்தரவிட்டது சூரத் நீதிமன்றம். இதனைத் தொடர்ந்து அவரிடம் இருந்த மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது, மேலும் அவர் பயன்படுத்தி வந்த உத்தியோகப்பூர்வ பாஸ்போர்ட் அவரிடம் இருந்து பெறப்பட்டது.
இந்நிலையில் தனது இரண்டு ஆண்டுகால சிறைத்தண்டனையை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த வழக்கின் மீதான விசாரணை நடந்து முடிந்துள்ள நிலையில் நாளை ராகுல் காந்தி வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது. இதில் ராகுல் காந்தி மீதான தண்டனையை நீதிமன்றம் தடை செய்தால் அவரது தகுதி நீக்கமும் ரத்து செய்யப்படலாம்.
ஆனால் நாளை என்ன தீர்ப்பு வரப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
இதையும் படியுங்கள் : முகத்தில் சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞர் - காலைக் கழுவி மன்னிப்பு கோரிய ம.பி. முதல்வர்