கொரோனாவை கண்டு பயப்படாதீங்க.. இலவச ஹெல்ப்லைன் எண்கள், ஈமெயில் , வாட்ஸ் அப் எண்.. எப்ப வேணா தொடர்பு கொள்ளுங்க

By karthikeyan VFirst Published Mar 21, 2020, 8:14 PM IST
Highlights

கொரோனா தொடர்பான சந்தேகங்கள், உதவிகளுக்கு தொடர்புகொள்ள வேண்டிய ஹெல்ப்லைன், வாட்ஸ் அப் எண்கள் மற்றும் ஈமெயில் ஐடி, வெப்சைட் ஆகியவற்றின் முழு விவரங்களை பார்க்கலாம்.

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிவருகிறது. சீனா, இத்தாலி, ஸ்பெய்ன், ஈரான் ஆகிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் தாறுமாறாக உள்ளது. 

இந்தியாவில் தினந்தோறும் கொரோனாவின் தீவிரம் அதிகரித்துவருகிறது. ஆனால் கொரோனாவை தடுக்க மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முனைப்புடன் எடுத்துவருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 300ஐ நெருங்கிக்கொண்டிருக்கிறது. 

கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு பரிசோதனைகள் செய்யப்பட்டுவருகின்றன. நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திற்குமான ஹெல்ப்லைன் எண்கள், வாட்ஸ் அப் எண்கள், ஈமெயில் ஐடி ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே கொரோனா தொடர்பான சந்தேகங்களுக்கும் உதவிகளுக்கும் கீழ்க்கண்ட எண்களை தொடர்புகொள்ளலாம்.

தேசிய அளவிலான பொதுவான ஹெல்ப்லைன் எண் -  
+91-11-23978046 

டோல்ஃப்ரீ நம்பர் - 1075

ஈமெயில் ஐடி - ncov.2019@gmail.com

கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டிய வெப்சைட் - mohfw.gov.in

வாட்ஸ் அப் நம்பர் - 9013151515

தமிழ்நாடு ஹெல்ப்லைன் - 044-29510500

கர்நாடகா, புதுச்சேரி, குஜராத், ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஹிமாச்சல பிரதேசம், பஞ்சாப், தெலுங்கானா, உத்தரகண்ட், பீஹார் ஹெல்ப்லைன் - 104.
 

click me!