காங்கிரஸ் அதிர்ச்சி... ராகுலை தொடர்ந்து அடுத்தடுத்து பதவி விலகும் மூத்த நிர்வாகிகள்..!

By vinoth kumarFirst Published Jul 4, 2019, 3:44 PM IST
Highlights

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை தொடர்ந்து ஹரீஷ் ராவத்தும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை தொடர்ந்து ஹரீஷ் ராவத்தும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் எதிர்கட்சி என்ற அந்தஸ்தையும் இழந்து காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து, அக்கட்சியின் பல்வேறு மாநில நிர்வாகிகள் ராஜினாமா செய்தனர். இதனிடையே, ராகுல் காந்தியும் தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ராகுலின் ராஜினாமா முடிவை ஏற்க மறுத்து முடிவை திரும்ப பெற வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்தி வந்தனர். அதேபோல பல்வேறு மாநில காங்கிரஸ் முதல்வர்களும் ராகுலே தலைவராக தொடர வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தனர். 

ஆனாலும் ராஜினாமா முடிவில் உறுதியாக இருந்த ராகுல் ராஜினாமா செய்வதற்கான 4 பக்க அறிக்கையை நேற்று வெளியிட்டார். மேலும் அதில் தோல்விக்கு பலரை பொறுப்பாக்க வேண்டும், கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும் எனவே புதிய தலைவரை தேர்ந்தெடுங்கள் என்றும் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில், இன்று உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

click me!