Har Ghar Tiranga: சுதந்திரதினத்தை முன்னிட்டு தேசியக் கொடியை எங்கெல்லாம் ஏற்ற அரசு திட்டமிட்டுள்ளது தெரியுமா?

By Pothy RajFirst Published Aug 5, 2022, 10:01 AM IST
Highlights

நாட்டின் 75வது சுதந்திரதினத்தை முன்னிட்டு மூவர்ணக்கொடியை நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் மூவர்ணக் கொடியை ஏற்றி கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நாட்டின் 75வது சுதந்திரதினத்தை முன்னிட்டு மூவர்ணக்கொடியை நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் மூவர்ணக் கொடியை ஏற்றி கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக ஹர் கர் திரங்கா எனும் முழக்கத்தை பிரதமர் மோடி முன்னெடுத்தார். இதன்படி சுதந்திரனத்துக்கு 3 நாட்களுக்கு முன்பாகவே மக்கள் வீடுகளில் மூவர்ணக் கொடியை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். அதுமட்டுமல்லாமல் கடந்த மன்கிபாத் வாணொலி உரையிலும் மக்கள் தங்களின்சமூக ஊடகக் கணக்களில் டிபி-யில் தேசியக் கொடியை வைக்க வேண்டும் என்று மோடி கேட்டுக்கொண்டார். 

முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 136 அடியாக உயர்வு.. இன்று நீர் திறப்பால் வெள்ள அபாய எச்சரிக்கை.!

இதற்காக மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் இணையதளம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி மக்கள் தங்கள் சார்ந்துள்ள பகுதிகளில் தேசியக் கொடியை அதில் இணையவழியாக பின் செய்து கொண்டாட முடியும். கடந்த வியாழக்கிழமை வரை 1.25 கோடி பேர் இதில் பின் செய்து தங்களைப் பதிவுசெய்துள்ளனர். 

இது தவிர பங்கேற்பார்கள் தேசியக் கொடியுடன் கூடிய தங்களின் செல்பி புகைப்படத்தையும் அதில் பதிவிட முடியும். இந்த செல்பிகள் அனைத்தும் இணையதளத்தில் காண்பிக்கப்படும். இதுவரை 30 லட்சம் பேர் இதில் செல்பிகளை பதிவிட்டுள்ளனர்.

ஒவ்வொரு இந்தியரும் தங்கள் வீடுகளில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும், தங்கள் மனதில் உள்ள தேசப்பற்றை வெளிப்படுத்தி, தேசியக் கொடி குறித்த விழிப்புணர்வை ஊட்ட வேண்டும் என்பதாகும் என்று மத்திய நிதிஅமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிக்குகிறார் சஞ்சய் ராவத் மனைவி வர்ஷா; அமலாக்கத்துறை நோட்டீஸ்!!

ஹர் கர் திரங்கா எவ்வாறு ஒவ்வொரு மாநிலத்திலும் பிரச்சாரம் செய்யப்படுகிறது

டெல்லியில் துணை நிலை ஆளுநர் உத்தரவின்படி, சந்தைகள், பள்ளிகள், மருத்துவமனைகள், உள்ளிட்ட இடங்களில் தேசியக்கொடி ஏற்றப்படுகிறது. பள்ளிகள் அனைத்தும் போட்டிகள் நடத்த வேண்டும். இதில் 1,530 பள்ளிகள் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது.

அதுமட்டுமல்லாமல் 20 கோடி வீடுகள், தனியார் நிறுவனங்கள், அமைப்புகளில் ஆகஸ்ட் 13 முதல் 15வரை தேசியக் கொடி ஏற்றப்படுகிறது. இதேபோல் டெல்லியிலும்வீடுகளிலும், தனியார் நிறுவனங்களிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும்.

கர்நாடகாவில் ஏசியாநெட் குழுமம் சார்பில் நடத்தப்பட்ட அம்ரித் மகோத்சவ் யாத்திரை நிறைவு

 வங்கிகள், அரசு அமைப்புகள், நிறுவனங்கள் ஆகியவை வாடிக்கையாளர்களுக்கும், மக்களுக்கு தேசியக் கொடியை வினியோகம் செய்ய வேண்டும். ஆகஸ்ட் 1ம்தேதி முதல் நாட்டில் உள்ள 1.60 லட்சம் தபால் நிலையங்களும் மூவர்ணக் கொடியை விற்பனை செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் உள்ளூர் கடைகளிலும், இவர்த்தக தளங்களும் தேசியக் கொடி விற்பனையை ஊக்கப்படுத்த மாநிலஅ ரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


உத்தரப்பிரதேசத்தில் 4 கோடி தேசியக் கொடியை ஏற்ற உ.பி. அரசு திட்டமிட்டுள்ளது. தேசியக் கொடி கதர்துணியிலும், பாலிஸ்டர் துணியிலும் இலவசமாக மக்களுக்கு கிடைக்கும். இந்த 4 கோடி கொடிகளில் 1.50 கொடிகள் சுய உதவிகுழுக்களாலும், தொண்டு நிறுவனங்களாலும், தனியார் நிறுவனங்களாலும் தயாரிக்கப்பட்டது. பிரதமர் மோடி அறிவிப்பைத் தொடர்ந்து ஹரியானா, பஞ்சாப் அரசுகள் தங்கள் மாநிலங்களில் தேசியக் கொடி ஏற்றுவது குறித்து பிரச்சாரம் செய்யத் தொடங்கியுள்ளன. 

கார்ப்பரேட் நிறுவனங்கள், கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதியிலிருந்து சுதந்திரதினக் கொண்டாட்டத்துக்கு செலவிட மத்திய கார்ப்பரேட் விவகாரத்துறை அனுமதியளித்துள்ளது.
 

click me!