பரிசுத் தொகை அதிகரிக்கிது.. 6ல் 4 எண்கள் பொருந்தினாலே 50,000 AED - டக்கர் அப்டேட் கொடுத்த Gulf Ticket!

By Ansgar R  |  First Published Mar 12, 2024, 5:22 PM IST

Gulf Ticket Prize Money Increased : Gulf Ticket தனது சூப்பர் 6 விளையாட்டுகளுக்கான பரிசுத் தொகையை அதிகரித்துள்ளது. இப்போது 6ல் 4 எண்கள் பொருந்தினால் போதும், நீங்கள் 50,000 AED வெல்லலாம். 


ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய ரேஃபிள் மற்றும் லாட்டரி வழங்குநரான "Gulf Ticket" நிறுவனம் அதன் பிரபலமான "சூப்பர் 6" கேமின் பரிசுத்தொகையில் பெரும் அதிகரிப்பு செய்துள்ளது. இதனால் இந்த சூப்பர் 6 விளையாட்டில் 6ல் 4 எண்களைப் பொருத்தினால் கிடைக்கும் பரிசுத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இது வீரர்களுக்கு பெரிய வெற்றி வாய்ப்புகளை வழங்கும்.

முன்னதாக இந்த "சூப்பர் 6" விளையாட்டில், 6ல் 4 எண்கள் பொருந்தினால், வெற்றியாளருக்கு 500 AED (யுனைடெட் அரபு எமிரேட்ஸ் திர்ஹாம்ஸ்) பரிசு வழங்கப்பட்டது. அனால் இப்போது 6ல் 4 எண்களை வெற்றிகரமாகப் பொருத்தும் வீரர்கள் AED 50,000 பரிசுத்தொகையைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

Tap to resize

Latest Videos

Gulf Ticketன் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி ஜோரன் போபோவிக் கூறுகையில், “சூப்பர் 6க்கான பரிசுத் தொகையை அதிகரிப்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இதில் விளையாடும் வீரர்களின் அனுபவத்தை மேம்படுத்தவும், வாழ்க்கையை மாற்றும் பரிசுகளை வெல்ல அதிக வாய்ப்புகளை உருவாக்கவும் நாங்கள் தொடர்ந்து பாடுபடுகிறோம். "இந்த மாற்றம் எங்கள் வீரர்களுக்கு சூப்பர் 6ஐ இன்னும் கவர்ச்சிகரமானதாக ஆக்குகிறது. அவர்கள் கணிசமான வெகுமதிகளுடன் முன்னேறுவதற்கான சிறந்த வாய்ப்பைப் பெறுகிறார்கள்."

உண்மையில், 6 எண்களில் 4ஐப் பொருத்துவதற்கான அதிகரித்த பரிசுத் தொகை, இனி வரும் அனைத்து சூப்பர் 6 டிராக்களுக்கும் பொருந்தும். AED 100 மில்லியன் பரிசு அல்லது கேம் வழங்கும் பல அற்புதமான பரிசுகளை வெல்வதற்கான வாய்ப்பைப் பெற வீரர்கள் தங்கள் அதிர்ஷ்ட எண்களைத் தேர்வு செய்யலாம். 

இந்த புதுப்பிப்பு Gulf Ticket வீரர்களுக்கு அற்புதமான கேமிங் அனுபவத்தையும் வாழ்க்கையை மாற்றும் வாய்ப்பையும் வழங்க முயல்கிறது. அனைத்து வீரர்களுக்கும் சிறந்த வெற்றி அனுபவத்தை வழங்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த பரிசுகளை மாற்றம் செய்துள்ளது.

கூடுதல் விவரங்கள் அறிய.. Gulf Ticket

click me!