மீண்டும் குஜராத்தை நோக்கி திரும்பும் புயல் !! கட்ச் மாவட்டத்தை தாக்கும் என அறிவிப்பு !!

By Selvanayagam PFirst Published Jun 15, 2019, 10:21 AM IST
Highlights

அரபிக் கடலில் உருவாகி அதி தீவிர புயலாக மாறி, திசையை மாற்றிய 'வாயு' புயல் மீண்டும் தனது திசையை மாற்றி, கட்ச் பகுதியை தாக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரபிக் கடலில், கடந்த, 9ம் தேதி, குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டது. பின், இது புயலாக மாறியது. இதற்கு, 'வாயு' என, பெயர் சூட்டப்பட்டது.  இந்தப் புயல்,அரபிக் கடலில், கடந்த, 9ம் தேதி, குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டது. பின், இது புயலாக மாறியது. 
இந்தப் புயல், குஜராத் மாநிலத்தில், கரையை கடக்கும் என, வானிலை ஆய்வு மையம் கணித்தது. ஆனால், திடீரென புயல் திசை மாறியது. 

தற்போது, குஜராத் மாநிலம், போர்பந்தரில் இருந்து மேற்கே, 150 கி.மீ., துாரத்தில் நிலை கொண்டிருந்தது.இது, ஓமன் பகுதிக்கு செல்லலாம் என, எதிர்பார்க்கப்பட்டது. இதனை வானிலை மைய நிர்வாகிகள் கண்காணித்து வந்தனர்.


இந்நிலையில் மத்திய புவி அறிவியல் துறை செயலாளர் எம்.ராஜீவன் கூறுகையில், வாயு புயல், மீண்டும் தனது திசையை மாற்றி, வரும் 17 -18 தேதிகளில் குஜராத்தின் கட்ச் மாவட்டத்தை தாக்கக்கூடும். மிக அதி தீவிர புயலான புயலின் தன்மை குறையக்கூடும். கட்ச் பகுதியை, சூறாவளி புயலாக தாக்கக்கூடும் என்றார்.

click me!