இரண்டு மாநில ஆளுநர்கள் திடீர் மாற்றம்... குடியரசுத் தலைவர் அறிவிப்பு..!

By vinoth kumarFirst Published Jul 15, 2019, 4:53 PM IST
Highlights

குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் ஆளுநர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இமாச்சலப் பிரதேசத்தில் ஆளுநராக முன்னாள் அமைச்சர் கல்ராஜ் மிஷ்ராவும், குஜராத் ஆளுநராக ஆச்சார்யா தேவ் விராட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

2015-ம் ஆண்டு முதல் இமாச்சல பிரதேச ஆளுநராகவும், அதற்கு முன் ராஜஸ்தான் ஆளுநராகவும் பதவி வகித்து வந்த ஆச்சார்ய தேவ்ராட் பஞ்சாபில் பிறந்தவர். 4 ஆண்டுகளாக இமாச்சல் ஆளுநர் பொறுப்பில் இருந்த ஆச்சார்ய விராட்டை குஜராத் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே குஜராத் ஆளுநராக இருந்த ஓம் பிரகாஷ் கோலி பதவிக்காலம் நாளையோடு முடியும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதேபோல், இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தின் புதிய ஆளுநராக பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கல்ராஜ் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று பிறப்பித்துள்ளார்.

click me!