காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி... 4 நாட்களில் 3 எம்.எல்.ஏ. பதவி விலகல்...!

By vinoth kumarFirst Published Mar 12, 2019, 11:57 AM IST
Highlights

குஜராத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேலும் ஒரு எம்எல்ஏ நேற்று தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்துள்ளார். கடந்த 4 நாட்களில் 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகியுள்ளனர். 

குஜராத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேலும் ஒரு எம்எல்ஏ நேற்று தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்துள்ளார். கடந்த 4 நாட்களில் 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகியுள்ளனர். 

குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2 பேர் ஏற்கனவே அக்கட்சியில் இருந்து விலகியுள்ளனர். இந்நிலையில், ஜம்நகர் புறநகர் பகுதியின் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த காங்கிரஸ் பிரமுகர் வல்லப் தராவியா என்பவர் நேற்று தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ராஜேந்திர திரிவேதியிடம் சமர்ப்பித்தார். 

இதனால், கடந்த 4 நாட்களில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 3 உயர்ந்துள்ளது. இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து சமீபத்தில் விலகிய புருஷோத்தம் சவாரியா இன்று பா.ஜ.க.வில் இணைந்தார். மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குஜராத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தொடர்ந்து ராஜினாமா செய்து வருவது அந்தக் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

தற்போதைய சட்டமன்றத்தில் 182 சட்டப் பேரவை உறுப்பினர்கள் உள்ளனர். அதில் பாஜகவில் 100 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரசில் 71 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.

click me!