தயார் நிலையில் GSLV-F9 செயற்கைக்கோள்…நாளை மறுநாள் விண்ணில் பறக்கிறது…

Asianet News Tamil  
Published : May 03, 2017, 08:55 AM ISTUpdated : Sep 19, 2018, 03:14 AM IST
தயார் நிலையில் GSLV-F9 செயற்கைக்கோள்…நாளை மறுநாள் விண்ணில் பறக்கிறது…

சுருக்கம்

GSLV-F9

தெற்காசிய நாடுகளில் இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே தெரிவிக்கும் வல்லமை கொண்ட GSLV-F9 செயற்கைக்கோள் நாளை மறுநாள்  விண்ணில் ஏவப்படுகிறது. இதற்காக செயற்கை கோளில்  எரிபொருள் நிரப்பும் பணி தொடங்கியுள்ளது.ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி- எப்09 ராக்கெட் மூலம் ஜிசாட் 9 செயற்கைக்கோள் நாளை மறுநாள்  விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.இதற்கான இறுதிகட்டப் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.தெற்காசிய மண்டல நாடுகளில், பாகிஸ்தானைத் தவிர மற்ற நாடுகளின் கூட்டுத் திட்டத்தில், பயன்பாட்டுக்காக ஜிசாட் 9 செற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது.2,023 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், தகவல் தொடர்புக்கு உதவும் "12 கே.யு பேண்ட்" கருவிகளை சுமந்து செல்கிறது.இந்த செயற்கைக்கோளை சுமந்து செல்லும் ஜி.எஸ்.எல்.வி- எப்09 ராக்கெட்டை ஏவுவதற்கான கவுண்டவுன் இன்று  தொடங்குகிறது.இதனிடையே, ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பும் பணிகள் தொடங்கியுள்ளன.

PREV
click me!

Recommended Stories

நாட்டின் முதல் வந்தேபாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
ஆன்லைனில் வாக்கி-டாக்கி விற்பனை.. பிளிப்கார்ட், மீஷோ உள்ளிட்ட 8 நிறுவனங்களுக்கு விழுந்த அடி!