மன் கி பாத்’  வேண்டாம்  ‘கன் கி பாத்’ தான் வேண்டும்….பிரதமருக்கு ஐடியா கொடுத்த உத்தவ் தாக்ரே..

First Published May 3, 2017, 6:42 AM IST
Highlights
Uddave thakre


பாகிஸ்தான் ராணுவத்தால் இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதையடுத்து ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியை நிறுத்திவிட்டு ‘கன் கி பாத்’-ஐ தொடங்குங்கள் என பிரதமர் மோடிக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே அறிவுரை கூறியுள்ளார்.

காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே 30 ஆம் தேதி இரண்டு இந்திய பாதுகாப்பு படை வீரர்களை பாகிஸ்தான் ராணுவத்தினர் கொடூரமாக கொலை செய்யதோடு மட்டுமல்லாமல், தலையை சிதைத்து தூக்கி எறிந்துள்ளனர்.

இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி இது குறித்து வாய்திறக்காமல் இருப்பது பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்ரே பிரதமர் மோடியின் இந்த மவுனம் குறித்து கேள்வியெழுப்பியுள்ளார். கட்சி தொண்டர்களிடம் உத்தவ் தாக்ரே பேசும்போது பிரதமர் மோடி வானொலி மூலம் மக்களிடம் உரையாற்றும் மனதின் குரல் எனப்படும்  ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியை நிறுத்தி விட்டு ‘கன் கி பாத்’ நிகழ்ச்சியை தொடங்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். 

உத்தவ் தாக்ரேவின் இந்த பேச்சு சிவ சேனா கட்சியினரிடையே பெரம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

 

click me!