இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது 100வது ராக்கெட்டான ஜிஎஸ்எல்வி எப்-15ஐ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. இந்த ராக்கெட் மூலம் NVS-02 செயற்கைக்கோள் மேப், காலநிலை மற்றும் போக்குவரத்தைக் கண்காணிக்கும்.
ஸ்ரீஹரிகோட்டாவும் விண்வெளி சாதனையும்
விண்வெளி துறையில் கலக்கி வரும் இந்தியா சந்திரியான், மங்கள்யான் என பல திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது. அதிலும் சந்திரனில் உலக நாடுகள் போகாத தென் உருவத்தில் கால் பதித்தும் சாதித்துள்ளது. இது போன்ற பல்வேறு சாதனைகளை படைத்த இந்தியா ஆகஸ்ட் 10, 1979 அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட முதல் பெரிய ராக்கெட் SLV ஆகும். ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது ஸ்ரீஹரிகோட்டா, மேற்கில் பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் கிழக்கில் வங்காள விரிகுடாவின் நடுவே அமைந்துள்ளது, இங்கிருந்து தான் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்டைைவெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
100 வது ராக்கெட்
இதனையடுத்து புதிய சாதனையாக இஸ்ரோ தனது 100வது ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவுவதற்காக தயாரானது. அந்த வகையில் ஜிஎஸ்எல்வி எப்-15 ராக்கெட் மூலம் NVS-02 செயற்கைக்கோளை இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து ஏவுவதற்கான கவுண்டவுன் நேற்று காலை தொடங்கியது. இதனையடுத்து விஞ்ஞானிகள் முழு வீச்சில் பணி தொடங்கிய நிலையில் இன்று காலை சரியாக 06:23 மணிக்கு விண்ணில் ஜிஎஸ்எல்வி எப்-15 ராக்கெட் ஏவப்பட்டது. 100வது ராக்கெட் விண்ணில் பாய்ந்ததை பார்ப்பதற்காக மாணவ, மாணவிகளை சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டனர், நெருப்பு பிழம்போடு விண்ணில் பாய்ந்த ராக்கெட்டை மாணவர்கள் கை தட்டி மகிச்சியை வெளிப்படுத்தினர்.
விண்ணில் ஏவிய ராக்கெட்டின் பாதை சரியாக உள்ளதா என விஞ்ஞானிகள் கணிணி மூலமாக சரிபார்த்தனர். ராக்கெட் தனது புவி வட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இதனையடுத்து விஞ்ஞானிகள் ஒருவருக்கு ஒருவர் கட்டி தழுவியும், கை கொடுத்தும் வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர்.
காலநிலை கண்காணிக்கும் ராக்கெட்
இதனிடையே இஸ்ரோ இன்று விண்ணில் செலுத்திய ஜிஎஸ்எல்வி எப்-15 ராக்கெட் NVS-02 செயற்கைக்கோளானது மேப், காலநிலை, தரை, கடல் மற்றும் வான்வெளி போக்குவரத்தை கண்காணிக்கும் சேவைகளுக்கு பெரும் உதவியாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரான அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் இந்த செயற்கைக்கோளில் இடம் பெற்றுள்ளன. எல் 1, எல் 5, மற்றும் எஸ் பேண்ட் டிரான்ஸ்பான்டர்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.