ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் வென்றுள்ளது மீண்டும் ஒரு உலக சாதனை!

By Raghupati R  |  First Published Dec 23, 2024, 3:17 PM IST

ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் தனது 60-வது ஆண்டு விழாவில் 3.527 கிலோ எடையுள்ள 22 காரட் தங்க மெகா காதணிகளை உருவாக்கி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை தென்னிந்திய கலாச்சார பாரம்பரியத்தையும் ஜிஆர்டி-யின் கைவினைத்திறனையும் எடுத்துக்காட்டுகிறது.


ஜிஆர்டி ஜுவல்லர்ஸ், அறுபது ஆண்டுகளாக நகைத்துறையில் நம்பிக்கையான பெயராக திகழ்கிறது. தற்போது அதன் 60-வது ஆண்டு சிறப்பை பெருமையுடன் கொண்டாடுகிறது. பாரம்பரியத்தையும், நவீன தொழில்நுட்பத்தையும் இணைப்பதில் புகழ்பெற்ற இந்த நிறுவனம்… நம்பிக்கை, தூய்மை மற்றும் வாழ்க்கையின் நேசத்துக்குரிய தருணங்களை ; காலத்தால் அழியாத வடிவமைப்புகளுக்கு இணையான பெயராக விளங்குகிறது. தென் இந்தியாவில் 61 கிளைகளையும் மற்றும் சிங்கப்பூரிலும் தனது கிளைகளை கொண்டுள்ள ஜிஆர்டி ஜுவல்லர்ஸ்… தலைமுறை தலைமுறையினருக்கு தன் அர்ப்பணிப்பான தரத்துடன், காலத்தால் நிலைத்திருக்கும் அரிய நகைகளை உருவாக்கும் உறுதிப்பாட்டுடன் தொடர்ந்து மிளிர்கிறது.

Tap to resize

Latest Videos

undefined

இந்த சிறப்புமிக்க 60-வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஜிஆர்டி ஜுவல்லர்ஸ், அதன் முந்தைய கின்னஸ் உலக சாதனையை முறியடித்து, ஒரு அசாதாரண சாதனையைப் படைத்துள்ளது. இந்நிறுவனம் 22 காரட் தங்கத்தினால் ஆன 3.527 கிலோகிராம் எடையுள்ள மெகா காதணிகள் என்ற அற்புதமான படைப்பை உருவாக்கியுள்ளது. இந்த பிரமிக்க வைக்கும் வடிவமைப்பு தென்னிந்தியாவின் செழுமையான கலாச்சார பாரம்பரியத்திற்கு மரியாதை செலுத்தும் அதே வேளையில், ஜிஆர்டி-யின் தலைசிறந்த கைவினைஞர்களின் இணையற்ற திறனை வெளிப்படுத்துகிறது. இந்த காதணிகளுடன் ஜிஆர்டி ஜுவல்லர்ஸ், உலகின் அதிக எடை கொண்ட தங்க காதணிகளை உருவாக்கி, மீண்டும் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

இந்த வரலாற்றுச் சாதனையை கின்னஸ் உலக சாதனைகள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தீர்ப்பாளர் அங்கீகரித்து, அதற்குரிய நினைவுப் பலகையை ஜிஆர்டி-யின் நிர்வாக இயக்குனர்களான திரு. ஜி.ஆர். ‘ஆனந்த்’ அனந்தபத்மநாபன் மற்றும் திரு. ஜி.ஆர். ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கினார். இந்த சாதனை ஜிஆர்டி-யின் இடைவிடாத கண்டுபிடிப்புகள் மற்றும் நகைத்துறையில் புதிய இலக்கு எல்லைகளை அமைப்பதில், அதன் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.

click me!