பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை குறித்து தகவல் கொடுத்தால் 10 லட்சம் ரூபாய் பரிசு…  கர்நாடக அரசு அறிவிப்பு !!!

Asianet News Tamil  
Published : Sep 08, 2017, 01:35 PM ISTUpdated : Sep 19, 2018, 01:09 AM IST
பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை குறித்து தகவல் கொடுத்தால் 10 லட்சம் ரூபாய் பரிசு…  கர்நாடக அரசு அறிவிப்பு !!!

சுருக்கம்

gowri langesh murder case... 10 lakhs gift

பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை குறித்து தகவல் கொடுத்தால் 10 லட்சம் ரூபாய் பரிசு…  கர்நாடக அரசு அறிவிப்பு !!!

பெங்களூரைச் சேர்ந்த மத்த பத்திரிகையாளரும், சமூக சேவகருமான கவுரி லங்கேஷ்  சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான துப்பு  கொடுத்தால் 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

கர்நாடக பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கடந்த  வாரம் மர்ம நபர்களால் அவரது வீட்டு வாயிலில் காரில் இருந்து இறங்கும் போது  சுட்டுக்கொல்லப்பட்டார்.

பல்வேறு கருத்துக்களை துணிச்சலுடன் முன்வைத்து வந்த கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இதையடுத்து, கவுரி லங்கேஷ் படுகொலை தொடர்பாக விசாரிக்க உளவுத்துறை போலீஸ் ஐ.ஜி.யான பி.கே.சிங் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினர் கவுரி லங்கேஷின் வீட்டிற்கு சென்று சிசிடிவி கேமிரா காட்சிகளையும் போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த நிலையில், கவுரி லங்கேஷ் கொலைக் குற்றவாளிகள் குறித்து துப்பு கொடுத்தால், 10 லட்சம்  ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்கா ரெட்டி  தெரிவித்துள்ளார்

 


 

 

 

 

 

 

PREV
click me!

Recommended Stories

ரூ.150 கோடியில் அம்பானி வாங்கிய ஆகாச அரக்கன்..! Rolls-Royce of skies.. இவ்வளவு வசதி இருக்கா..?
கணவனை கழற்றிவிட்டு ஏசி மெக்கானிக்கவுடன் சென்ற 25 வயது பெண்.. 8 மாதத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!