ரிசர்வ் வங்கி துணை ஆளுநராக சுவாமிநாதன் ஜானகிராமன் நியமனம்!

Published : Jun 21, 2023, 10:12 AM IST
ரிசர்வ் வங்கி துணை ஆளுநராக சுவாமிநாதன் ஜானகிராமன் நியமனம்!

சுருக்கம்

ரிசர்வ் வங்கி துணை ஆளுநராக சுவாமிநாதன் ஜானகிராமனை மத்திய அரசு நியமித்துள்ளது

இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) புதிய துணை ஆளுநராக சுவாமிநாதன் ஜானகிராமனை மத்திய அரசு நியமித்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. பணியில் இணைந்த நாளில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு அவர் அப்பதவியில் வகிப்பார். சுவாமிநாதன் ஜானகிராமன், தற்போது பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) நிர்வாக இயக்குநராக பணியாற்றி வருகிறார்.

ரிசர்வ் வங்கியின் தற்போது துணை ஆளுநராக பதவி வகிக்கும் மகேஷ் குமார் ஜெயினின் பதவிக்காலம் ஜூன் 22ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது. மகேஷ் குமார் ஜெயின் கடந்த 2018ஆம் ஆண்டில் மூன்றாண்டு காலத்துக்கு ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர், ஜூன 2021ஆம் ஆண்டில் அவரது பதவிக்காலம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது.

டைம்ஸ் நவ்வின் தலைமை ஆசிரியர் பொறுப்பில் இருந்து ராகுல் ஷிவ்சங்கர் விலகல்

அதன்படி, மகேஷ் குமார் ஜெயினின் பதவிக்காலம் முடிவடையவுள்ளதால், ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக சுவாமிநாதன் ஜானகிராமனை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி சட்டம் 1934இன் படி, மத்திய வங்கிக்கு நான்கு துணை ஆளுநர்கள் இருக்க வேண்டும். அதன்படி, மைக்கேல் தேபப்ரதா பத்ரா, ராஜேஷ்வர் ராவ், டி.ரபி சங்கர், மகேஷ் குமார் ஜெயின் ஆகிய நால்வர் இருந்தனர். தற்போது மகேஷ் குமார் ஜெயினின் பதவிக்காலம் முடிவடைவதால், அந்த இடத்துக்கு சுவாமிநாதன் ஜானகிராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ரிசர்வ் வங்கியில், நிதி உள்ளடக்கம், மேம்பாடு, நுகர்வோர் கல்வி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கியமான இலாகாக்களை மேற்பார்வையிடும் பொறுப்பை மகேஷ் குமார் ஜெயின் வகித்து வந்தார். இந்த துறைகள் தொடர்பான கொள்கைகளை வடிவமைத்து செயல்படுத்தியதில் துணை ஆளுநராக மகேஷ் குமார் ஜெயின் பங்கு முக்கியமானது.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான எஸ்பிஐயின் நிர்வாக இயக்குநராக உள்ள சுவாமிநாதன் ஜானகிராமன் அனுபவம், ரிசர்வ் வங்கியின் தலைமைக்கு புதிய முன்னெடுப்புகளை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது நியமனம், நிதி ஸ்திரத்தன்மையைப் பேணுதல், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல் மற்றும் இந்திய நிதி அமைப்பிற்குள் நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவற்றில் ரிசர்வ் வங்கியின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பங்களிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
புடின் விருந்தில் கலந்துகொள்ள சசி தரூருக்கு மட்டும் அழைப்பு! ராகுலுக்கு வெறுப்பேத்தும் பாஜக!