குளிர்பானங்கள், பீட்சா, பர்கருக்கு கூடுதல் வரி - பட்ஜெட்டில் விரைவில் அறிவிப்பு

First Published Jan 16, 2017, 8:00 PM IST
Highlights


பீட்சா, பர்கர் போன்ற பாஸ்ட் புட்கள், இனிப்புச்சுவை கொண்ட குளிப்பானங்கள் ஆகியவற்றுக்கு பிப்ரவரி 1-ந்தேதி தாக்கலாகும் மத்திய பட்ஜெட்டில் கடுமையான வரிவிதிப்பு இருக்கும் என செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுபோன்ற துரித உணவுகளால், மக்களின் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்படுகிறது. 

குறிப்பாக குழந்தைகள், இளைஞர்கள் பீட்சா,பர்கர் போன்ற உணவுகளை அதிகமாக உண்பதால், உடல்பருமன், இளம் வயதில் சர்க்கரை நோய், வாழ்க்கை முறை மாற்றத்துக்கு உள்ளாகின்றனர். இதைத் தடுக்கவே அவற்றின் மீதான வரியை மத்திய அரசு உயர்த்த திட்டமிட்டுள்ளது.

சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையில் பட்ஜெட் தொடர்பான அமைச்சகங்கள் அளவிலான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் சுகாதாரம், நகர மேம்பாட்டு, மற்றும் உடல்நலத்துறை சார்பில் இது தொடர்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. 

 இது குறித்து அமைச்சகக் குழுக்களில் உள்ள உறுப்பினர் ஒருவர் கூறுகையில், “ பிரதமர் மோடி தலைமையிலான 11 உறுப்பினர்கள் கொண்ட பட்ஜெட் தொடர்பான ஆலோசனைக் குழுவிடம், துரித உணவுகள், குளிப்பானங்களுக்கு கூடுதல் வரி விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம்.

இளைஞர்களின், குழந்தைகளின் உடல்நலத்தைக் காக்க இந்த கோரிக்கை வைக்கப்பட்டது. இதுபோன்ற உணவுப்பொருட்களை அதிகமான உண்பதன் காரணமாக உடல்பருமன், இளம்வயதில் சர்க்கரை நோய் வருகிறது. அதைத்தடுக்கவே இந்த வரி உயர்வு கோரப்பட்டது.

  இந்த வரி உயர்வின் மூலம், கிடைக்கும் வருவாயை  அரசு  மக்களின் சுகாதாரத்துக்காகச் செலவிடலாம்  எனத் தெரிவித்தார்.


 

click me!