ஆந்திராவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து.. பல ரயில்கள் ரத்து..

Published : Jun 14, 2023, 03:20 PM IST
ஆந்திராவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து.. பல ரயில்கள் ரத்து..

சுருக்கம்

விசாகப்பட்டினம் - விஜயவாடா வழித்தடத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டதால், பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

இன்று ஆந்திரப் பிரதேசத்தின் அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள தடி மற்றும் அனகாபல்லி ரயில் நிலையங்களுக்கு இடையே சரக்கு ரயில் தடம் புரண்டது. இதனால் அந்த வழித்தடத்தில் ரயில்களின் இயக்கம் பாதிக்கப்பட்டது. நிலக்கரி ஏற்றப்பட்ட சரக்கு ரயில் அதிகாலை 3.35 மணியளவில் தடம் புரண்டது. இந்த ரயில் தடம் புரண்டதால் விசாகப்பட்டினம்-விஜயவாடா வழித்தடத்தில் ரயில்கள் இயக்கம் பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக தென் மத்திய ரயில்வே இன்று 6 ரயில்களை ரத்து செய்துள்ளது மற்றும் சில ரயில்களின் நேரத்தை மாற்றியமைத்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் அதிகாலையில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கம்; தூக்கத்தை இழந்து பீதியில் உறைந்த பொதுமக்கள்

ரத்து செய்யப்பட்ட ரயில்கள் எவை?

12805 விசாகப்பட்டினம்-லிங்கம்பள்ளி

22701 விசாகப்பட்டினம்-விஜயவாடா

22702 விஜயவாடா-விசாகப்பட்டினம்

17240 விசாகப்பட்டினம்-குண்டூர்.

இதே போல் வியாழக்கிழமை புறப்பட வேண்டிய, 12806 லிங்கம்பள்ளி-விசாகப்பட்டினம், 17239 குண்டூர்-விசாகப்பட்டினம் ஆகிய  இரண்டு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. விசாகப்பட்டினத்தில் இருந்து புதன்கிழமை அதிகாலை 5.45 மணிக்கு புறப்பட வேண்டிய விசாகப்பட்டினம்-செகந்திராபாத் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (20833) மூன்று மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.

இதை தொடர்ந்து அதிகாரிகள், பணியாளர்கள் தடம் புரண்ட  ரயில் பெட்டிகளை மீட்டமைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் அந்த வழித்தடத்தில் காலை 10.30 மணிக்கு ரயில் சேவை தொடங்கியது.

மணிப்பூரில் மீண்டும் கலவரம்; 9 பேர் உயிரிழப்பு; விடுப்பில் இருக்கும் போலீசாருக்கு அழைப்பு!

PREV
click me!

Recommended Stories

மதக் கூட்டங்களில் பெண் ஜிஹாதிகள்..! இந்தியாவிற்கு எதிராக படுபயங்கர சதித்திட்டம்..! எல்லையில் தீவிர பாதுகாப்பு..!
IndiGo பயணிகளுக்கு ஷாக் கொடுத்த CEO.. இன்னும் 10 நாளைக்கு இது தான் கண்டிஷன்..!