நல்ல சாலைகள் தான் பிரச்சனையே.. துணை முதல்வரின் சர்ச்சை பேச்சு!

By Asianet TamilFirst Published Sep 12, 2019, 4:12 PM IST
Highlights

நாட்டில் தரமான சாலைகள் இருப்பதால் தான் அதிகளவில் விபத்துகள் ஏற்படுகின்றன என்று கர்நாடக துணை முதல்வர் கோவிந்த் கர்ஜோல் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் சாலை விபத்துகளை குறைப்பதற்காக புதிய மோட்டார் வாகன சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு அபராத தொகைகள் பலமடங்கு உயர்த்தப்பட்டது. இது பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பல மாநிலங்களில் இந்த சட்டத்தை ஏற்க அம்மாநில அரசுகள் மறுத்து வருகின்றன. பாஜக ஆளும் குஜராத், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களிலும் அபராத தொகைகள் குறைக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் கர்நாடகாவில் அபராத தொகையை குறைப்பது குறித்து அமைச்சரவையில் முடிவெடுக்கப்படும் என்று அம்மாநில துணை முதல்வர்களில் ஒருவரான கோவிந்த் கர்ஜோல் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தரமான சாலைகள் இருப்பது தான் அதிக விபத்துகள் ஏற்பட காரணம் என்று தெரிவித்த அவர், தரமான சாலைகளில் தான்  எல்லோரும் 120 முதல் 160 கிமீ வேகத்தில் செல்கிறார்கள். அதுதான் விபத்துக்கு முக்கிய காரணம் என்று கூறியுள்ளார்.

மேலும் வாகன ஓட்டிகளிடம் அதிக அபராத தொகை விதிப்பதில் தமக்கு உடன்பாடில்லை என்றும் கூறியுள்ளார்.

பாஜக ஆளும் மாநிலங்களிலேயே புதிய மோட்டார் வாகன சட்டதிருத்தத்திற்கு எதிர்ப்பு நிலவி வருவது மத்திய அரசுக்கு ஏற்படுத்தி இருக்கிறது.

click me!