தள்ளுவண்டியில் கேட்பாரற்று கிடந்த தங்க கட்டிகள் : போலீசார் பறிமுதல்!

Asianet News Tamil  
Published : Oct 21, 2016, 11:16 PM ISTUpdated : Sep 19, 2018, 03:10 AM IST
தள்ளுவண்டியில் கேட்பாரற்று கிடந்த தங்க கட்டிகள் : போலீசார் பறிமுதல்!

சுருக்கம்

மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் உடைமைகளை கொண்டுசெல்லும் தள்ளுவண்டியில் கேட்பாரற்று கிடந்த 12 தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

நாட்டின் பரபரப்பான விமான நிலையங்களில் மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையம் முக்‍கியமானதாகும். அங்கு உடைமைகளை எடுத்துச் செல்லும் தள்ளுவண்டி ஒன்றில் ஒரு பை கேட்பாரற்று கிடந்தது.

இதையறிந்த அதிகாரிகள் அந்த பைபை திறந்து பார்த்த போது அதில் 12 தங்கக்கட்டிகள் இருந்தது தெரியவந்தது. உரிய ஆவணங்களோ, உரிமையாளர்களோ இல்லாததையடுத்து, அவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இந்த தங்கக்‍ கட்டிகளின் மதிப்பு சுமார் 40 லட்சம் ரூபாயாகும். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

உனக்கு எங்க வீட்டு பொண்ணு கேக்குதா.. சாதி மறுப்பு திருமணம் செய்த சூரிய பிரகாஷ் ஆணவ கொலை
ஏப்ரல் 1 முதல் E20 பெட்ரோல்.. மைலேஜ் குறையுமா? ஓட்டுநர்கள் கவனத்திற்கு