வீட்டில் தங்கம் வச்சிருக்கீங்களா ? இனி அதற்கு வரி கட்டணும் !! வருகிறது தங்கம் பொது மன்னிப்புத் திட்டம் !!

By Selvanayagam PFirst Published Oct 31, 2019, 9:01 PM IST
Highlights

கறுப்புப் பணத்தை பதுக்க ஏராளமானோர் அதனை தங்கத்தில் முதலீடு செய்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அதனை மீட்க தங்கம் பொது மன்னிப்புத் திட்டத்தை கொண்டுவர முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இந் விட்டில் வைத்திருக்கும் தங்கத்துக்கு வரி கட்ட வேண்டும் என கூறப்படுகிறது.
 

கருப்புப் பணத்துக்கு எதிராக நடவடிக்கை என்ற பெயரில் கடந்த  2016 நவம்பரில் பிரதமர் மோடி பணமதிப்பழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டார். ஆனால் அத்திட்டம் தோல்வி அடைந்ததாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

அதாவது  இந்த நடவடிக்கையால் அனைத்து பணமும் வங்கிக்கு வரவில்லை.  ஆனால் ஏராளமானோர் தங்களிடம் இருந்த கருப்புப் பணத்தை தங்கத்தில் முதலீடு செய்ததாகச் கூறப்படுகிறது..

அதன்படி  இந்தியாவில் வரி செலுத்தி சுமார் 20,000 டன் தங்கம் உள்ளது என்றும் கணக்கில் காட்டாமல் 25 ஆயிரம் டன் முதல் 30 ஆயிரம் டன் தங்கம்  வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.  இதன் மதிப்பு ரூ.71 லட்சம் கோடி முதல் ரூ.106 லட்சம் கோடியாக இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தங்கத்தின் மூலம் முதலீடு செய்த கருப்பு பணத்தை மீட்பதற்காக மத்திய அரசு, ‘தங்கம் பொது மன்னிப்பு திட்டம்’ என்ற புதிய திட்டத்தை தீட்டியிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி ஒருவர் குறிப்பிட்ட அளவு வரை தங்கத்தை வைத்துக்கொள்ளலாம். ஆனால் அதற்கு மேல் வைத்திருப்பவர்கள் அதற்கான ரசீதுகளைக் காட்டி வரி செலுத்த வேண்டும். ரசீது இல்லாத தங்கத்துக்கும் முறையாகக் கணக்குக் காட்டி வரி செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

கணக்கில் காட்டப்படாத தங்கத்துக்கு 30 முதல் 33 சதவிகிதம் வரை வரி விதிக்கலாம் என்று சொல்லப்பட்டது. ஆனால் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் என்ற உச்ச வரம்பு குறித்துத் தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

click me!