பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் எது தெரியுமா?

 
Published : Nov 02, 2017, 02:15 PM ISTUpdated : Sep 19, 2018, 01:23 AM IST
பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் எது தெரியுமா?

சுருக்கம்

goa is the safest state for women

பாலியல் தொந்தரவு இல்லாமல் பெண்கள் பாதுகாப்பாக வாழ ஏற்ற மாநிலங்களின் பட்டியலில் கோவா முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. படிப்பிற்காக, வேலைக்காக செல்லும் பெண்களிடம் தொடர்ந்து பாலியல் அத்துமீறல்கள் நடந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் எது என்ற பட்டியலை தன்னார்வ அமைப்பான பிளான் இந்தியா அமைப்பு வெளியிட்டுள்ளது.

அந்த பட்டியலில், பாலியல் தொந்தரவு இல்லாமல் பெண்கள் பாதுகாப்பாக வாழும் மாநிலங்களில் கோவா முதலிடத்தில் உள்ளது. கேரளா இரண்டாம் இடத்திலும் மிசோரம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்கள் 3 மற்றும் 4 ஆகிய இடங்களிலும் உள்ளன.

பெண்கள் பாதுகாப்பில் மிகவும் மோசமான நிலையில் உள்ள மாநிலங்களில் பீகார் மாநிலம் முதலிடத்தில் உள்ளது.  மத்திய பிரதேசம், அருணாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட், உத்தரபிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்கள் பெண் பாதுகாப்பில் மோசமான மாநிலங்களாக உள்ளன.
 

PREV
click me!

Recommended Stories

கீபேட் போன் இருந்தா போதும்.. பெண்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை விதித்த கிராமம்!
ஒரு லட்சம் ரூபாய்க்கு காண்டம் வாங்கிய சென்னை நபர்! மிரளவிட்ட ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ரிப்போர்ட்!"