டென்த் பாஸ் பண்ணிட்டீங்களா மாணவிகளே ? இந்தா பிடிங்க பத்தாயிரம் ரூபாய் !!! உத்தரபிரதேச மாநில அரசு அதிரடி அறிவிப்பு…

First Published Jun 6, 2017, 6:39 AM IST
Highlights
Girls who passed in 10th std they wil eligible for get 10000 rupees reward from UP Govt


டென்த் பாஸ் பண்ணிட்டீங்களா மாணவிகளே ? இந்தா பிடிங்க பத்தாயிரம் ரூபாய் !!! உத்தரபிரதேச மாநில அரசு அதிரடி அறிவிப்பு…

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவிகள் ஒவ்வொருவருக்கும் 10  ஆயிரம்  ரூபாய் ரொக்கப்பரிசு அளிக்கப்படும் என உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் துணை முதலமைச்சரும்  கல்வித்துறை அமைச்சருமான தினேஷ் சர்மா துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் ஒன்றில் பங்கேற்றார்.

இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிகள் ஒரு லட்சம் பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை அளிக்கப்படும் என்று அறிவித்தார்.

மாநிலம் முழுவதும் இருந்து மெரிட் அடிப்படையில் மாணவிகளின் பெயர் பட்டியல் பெறப்பட்டு முதல் ஒரு லட்சம் மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மாணவிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், மாணவிகளுக்கு கல்வி அறிவை வழங்கும் விதத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் தினேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 12ஆம் வகுப்பு மாணவிகள் நலனுக்கான கன்யா வித்யா தன் யோஜனா திட்டத்தின் கீழ், பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கும் இத்திட்டம் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

click me!