மாணவிகளின் ஆடைகளை கத்தியால் கிழித்து ஆசிரியைகள் அத்துமீறல்! தேர்வெழுத சென்ற பள்ளியில் நடந்த கொடுமை

First Published May 14, 2018, 6:11 PM IST
Highlights
girls clothes ripped for breach of a teacher


துணை மருத்துவர் தேர்வு எழுத சென்ற மாணவிகளின் ஆடைகளை, ஆசிரியைகள் கத்தியால் கிழித்த சம்பவம் பெரும் அதிர்வலையை கிளப்பியுள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ள துணை மருத்துவர் பணியிடங்களுக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. இதில் அம்மாநிலத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்துகொண்டு தேர்வெழுதினர்.

இந்நிலையில், முசாபர்நகரில் தேர்வெழுத சென்ற மாணவிகளிடம், அங்கு பணியில் இருந்த ஆசிரியைகள் அத்துமீறல் அரங்கேறியுள்ளது. தேர்வெழுத வந்த மாணவிகளின் உடைகளில் இருந்த கைப்பகுதிகளை நீக்கினால் மட்டுமே அவர்களை தேர்வெழுத அனுமதிக்க முடியும் என ஆசிரியைகள் கூறியுள்ளனர்.

இதற்கு மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். ஆனாலும், அந்த ஆசிரியைகள் அனைவரின் முன்னிலையிலும் மாணவிகளில் உடையில் உள்ள கைபகுதியை கத்தியால் வெட்டியுள்ளனர்.

அதேபோல மாணவர்களையும் சட்டையை கழற்றுமாறு கூறியுள்ளனர். பீகாரில் நடந்த இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

click me!