சைனிக் பள்ளிகளில் மாணவிகளுக்கும் அனுமதி - மத்திய அரசு பரிசீலனை!!

First Published Aug 11, 2017, 3:43 PM IST
Highlights
girl students allowed in cynic schools


மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் சைனிக் பள்ளிகளில் மாணவிகளை சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது, மத்திய பாதுகாப்புதுறையின்இணைஅமைச்சர் சுபாஷ் ராமா ராவ் பாம்ரே பேசியதாவது-

மத்திய  பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் வரும், தேசிய பாதுகாப்பு அகாடெமிசார்பில்  26 சைனிக் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மேலும், 21 பள்ளிகளை திறக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இப்போது வரை அங்கு மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டு கல்வி பயிற்றுவிக்க படுகிறது. இனி வும் காலங்களில் மாணவிகளையும் சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும். இது இப்போது ஆலோசிக்கப்பட்டு  வருகிறது என்று தெரிவித்தார்.

மத்திய பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜெட்லி பேசுகையில், “ 22 மாநிலங்களில் 26சைனிக் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மற்ற மாநிலங்களும் தங்களுக்கும்சைனிக் பள்ளி தேவை என கோரிக்கை விடுத்துள்ளன. 21 சைனிக் பள்ளிகளை பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் அமைப்பது குறித்து திட்டம் உள்ளது. இதற்காக கடந்த 2017-18ம் நிதியாண்டில் ரூ.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு அகாடெமியில் ஏராளமானவர்களைச் சேர்க்க, சைனிக்பள்ளிகளும், ராஷ்ட்ரிய மிலிட்டரி பள்ளிகளும் உத்வேகமாக இருந்துள்ளன. கடந்த 2016ம் ஆண்டு, சைனிக் பள்ளியில் படித்த 159 பேரும், ராஷ்ட்ரிய மிலிட்டரி பள்ளியில் படித்த 31 பேரும் தேசிய பாதுகாப்பு அகாதெமியில் சேர்ந்துள்ளனர்.

சுதந்திரத்துக்கு பின், எந்த விதமான புதிய ரெஜிமண்ட் ஏதும் உருவாக்கப்படவில்லை. ராணுவத்தில் சேர்வதற்கு அனைத்து குடிமகன்களும் மதம், வகுப்பு, மண்டலம் என எந்விதமான பாகுபாடு இல்லாமல் அனுமதிக்கப்படுகிறாரகள்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

click me!