பலாத்காரம் செய்ய முயன்ற சாமியாரின் ஆணுறுப்பை துண்டித்த இளம்பெண்!!!

 
Published : May 20, 2017, 02:31 PM ISTUpdated : Sep 19, 2018, 12:38 AM IST
பலாத்காரம் செய்ய முயன்ற சாமியாரின் ஆணுறுப்பை துண்டித்த இளம்பெண்!!!

சுருக்கம்

girl cut down priest penis who try to rape

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் பல ஆண்டுகளாக பலாத்காரம் செய்து வந்த சாமியாரின் ‘மர்ம உறுப்பை‘  இளம் பெண் ஒருவர் நேற்று முன்தினம் ‘நறுக்’ செய்தது  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்ரமம்

கொல்லம் நகரம் பத்மனம் பகுதியில் ஆஸ்ரமம் நடத்தி வந்தவர் 54வயதான சாமியார் ஹரி என்ற கணேஷானந்தா தீர்த்தபாடி சாமி.

திருவனந்தபுரம் நகரம், கன்னமுலா பகுதியைச் சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவர்களின் குடும்பத்தினர் நீண்டகாலமாக சாமியார் ஹரி ஆஸ்ரமத்துக்கு வந்து சென்றுள்ளனர். இவர்களின் குடும்பத்தினருக்கு அனைத்து ஆலோசனைகளும் இந்த சாமியார் வழங்கி வந்ததாகக் கூறப்படுகிறது.

பிரார்த்தனை

இந்நிலையில், அந்த இளம்பெண்ணின்  தந்தைக்கு உடல் நலம் இல்லாமல் இருந்துள்ளது. இதனால், தினமும் இவர்களின் வீட்டுக்கு வந்த ஹரி சாமியார் பிரார்த்தனை செய்துள்ளார்.

பலாத்கார முயற்சி

இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு இதேபோல் வீட்டுக்கு வந்து இரவு பிரார்த்தனையில் ஈடுபட்ட போது, வீட்டில் இருந்த அந்த இளம் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது அந்த இளம் பெண் அந்த சாமியாரின் ‘மர்ம உறுப்பை’ கத்தியால் வெட்டினார். இதனால், ரத்த வௌ்ளத்தில்துடிதுடித்துப்போன அந்த சாமியாரை திருவனந்தபுரம்  மருந்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

இளம்பெண் புகார்

இது குறித்து அந்த இளம்பெண் திருவனந்தபுரம் பேட்டை போலீஸ் நிலையத்தில் தானாகச் சென்று நடந்த விஷயங்களை கூறி புகார் கொடுத்தார்.

பல ஆண்டுகளாக

அந்த இளம் பெண் அளித்த புகார் குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், “ இந்த இளம் பெண் குடும்பத்தினர் பல ஆண்டுகளாக சாமியாரின் போதனைகளையும், ஆலோசனைகளும் கேட்டு வந்துள்ளனர். அப்போது, பள்ளியில் படித்துவந்த இளம் பெண்ணை அவர்களின் பெற்றோர் இல்லாத போது அந்த சாமியார் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இது பல  ஆண்டுகளாக நடந்துள்ளது.  இது குறித்து அந்த இளம் பெண் அவரின் பெற்றோர்களிடம் கூறியும் நடவடிக்கை இல்லை. அவர்கள் யாரும் நம்பவில்லை.

மீண்டும் முயற்சி

இந்நிலையில், தனது தந்தைக்கு உடல்நலம் இல்லாமல் இருந்தபோது,  வீட்டுக்கு வந்த சாமியார் ஹரி , மீண்டும் அந்த இளம் பெண்ணிடம் அவ்வப்போது சில்மிஷத்தில் ஈடுபட்டு பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இது குறித்து அந்த பெண் பெற்றோர்களிடம் கூறியும் நம்பவில்லை. இதையடுத்து, சாமியாருக்கு சரியான பாடம் புகட்ட அந்த இளம் பெண் முடிவு செய்துள்ளார்.

கத்தியால் நறுக்

வௌ்ளிக்கிழமை இரவு இதேபோல், அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய அந்த சாமியார் முயற்சித்துள்ளார். அப்போது அந்த பெண் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால், அந்த சாமியாரின் மர்ம உறுப்பை வெட்டினார்’’ எனத் தெரிவித்தனர்.

90 % இல்லை

திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், “ சாமியார் ஹரியின் ‘மர்ம உறுப்பு’ 90 சதவீதம் எடுக்கப்பட்டுவிட்டது. இப்போது உயிருக்கு ஆபத்து இல்லை. பிளாஸ்டிக் சர்ஜரி மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு ரத்தம் வௌியேறுவது தடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் இழந்த உறுப்பை பொருத்த வாய்பில்லை’’ என்றனர். இதையடுத்து சாமியார் ஹரி மீது போலீசார் ‘போஸ்கோ’சட்டம், மற்றும் ஐ.பி.சி. 307 பிரிவு கற்பழிக்க முயற்சி ஆகிய அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

நண்பேண் டா..! இந்தியாவுக்காக உதவ மீண்டும் முன்வந்த புடின்..! ரஷ்யாயாவுடன் பிளாக்பஸ்டர் ஒப்பந்தம்..!
இந்திய எல்லைக்குள் ஊடுருவிய ஜெய்ஷ்-இ-முகமது பெண்..! பாகிஸ்தானை அம்பலப்படுத்தப்போகும் ஷாஹ்னாஸ் அக்தர்..!