Ghulam Nabi Azad: congress : குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியிலிருந்து திடீர் விலகல்

By Pothy RajFirst Published Aug 26, 2022, 11:45 AM IST
Highlights

காங்கிரஸ் கட்சியியிலிருந்து மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் விலகுவதாகத் தெரிவித்துள்ளார் என்று ஏஎன்ஐ செய்திகள் தெரிவிக்கின்றன

காங்கிரஸ் கட்சியியிலிருந்து மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் விலகுவதாகத் தெரிவித்துள்ளார் என்று ஏஎன்ஐ செய்திகள் தெரிவிக்கின்றன

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான குலாம் நபிஆசாத். காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முன்னாள் முதல்வராகவும் குலாம் நபி ஆசாத் இருந்தார். 

காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு எதிராக ஜி23 தலைவர்கள் போர்க்கொடி தூக்கியதில் குலாம் நபி ஆசாத் முக்கியமானவர். இதன் காரணமாகவே மாநிலங்களவை எம்.பி. பதவிக்காலம் முடிந்ததவும் அவருக்கு பதவி ஏதும் வழங்காமல் காங்கிரஸ் தலைமை ஓரம் கட்டியது. சமீபத்தில் ஜம்மு காஷ்மீருக்கான தேர்தல் பிரச்சாரக் குழுத் தலைவராக குலாம் நபி ஆசாத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நியமித்தார்.

ஆனால், அவர் நியமித்த சிலமணிநேரத்தில் குலாம் நபி ஆசாத் அந்தப் பதவியிலிருந்து விலகினார். இதனால் காங்கிரஸ் தலைமைக்கும் குலாம் நபி ஆசாத்துககும் இடையே மோதல் முற்றியது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து குலாம் நபி ஆசாத் விலகியுள்ளார். 

சோனியா காந்தி அரசியலுக்கு வந்தபின் அவருக்கு தீவிர ஆலோசகராகவும்,  பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்படும் உட்கட்சிப்பிரச்சினைகள், ஆட்சி மாற்றத்தில் சிக்கல் ஆகியவற்றை தீர்க்க குலாம் நபி ஆசாத் முன்னிலையில் செல்வார். காங்கிரஸ் கட்சிக்குள் செல்வாக்குடன் இருந்த குலாம் நபிஆசாத் கடந்த இரு ஆண்டுகளாக ஓரம் கட்டப்பட்டதால் விலகியுள்ளார்.

 

click me!