டெல்லியில் ஜி20 கூட்டம்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விவரம்!

By Manikanda Prabu  |  First Published Aug 29, 2023, 5:18 PM IST

தலைநகர் டெல்லியில் ஜி20 உச்சிமாநாடு அடுத்த மாதம் இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது


ஜி20 அமைப்பு கடந்த 1999ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதில் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், சீனா, இந்தியா, கனடா, துருக்கி, தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, தென்கொரியா, மெக்சிகோ, இத்தாலி, இந்தோனேசியா, பிரேசில், ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் தலைமை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவிடம் வந்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக, தாமரை மலர் மீது பூமிப்பந்து இருப்பது போன்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள ஜி20 தலைமைக்கான இலச்சினை (லோகோ), ‘ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்.’ என்ற ஜி20க்கன கருப்பொருள் ஆகியவற்றை பிரதமர் மோடி வெளியிட்டார். ஜி20 இந்திய தலைமையின் ஷெர்பாவாக (தலைவர்) நிதி அயோக்கின் தலைமை செயல் அதிகாரியான அமிதாப் கண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

Tap to resize

Latest Videos

இதையடுத்து, நாடு முழுவதும் பல்வேறு தலைப்புகளில் ஜி20 கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பிரதமர் மோடி, அமைச்சர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள் என பலரும் அக்கூட்டத்தில் கலந்து கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டை அதன் தலைமையை ஏற்றுக்கொண்டுள்ள இந்தியா நடத்தவுள்ளது. அதன்படி, ஜி20 உச்சிமாநாட்டின் முதன்மை அமர்வு கூட்டம் வருகிற செப்டம்பர் மாதம் 9,10 ஆகிய தேதிகளில் டெல்லி பிரகதி மைதானம் இந்திய வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு வளாகத்தில் (ITPO) உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

LPG Gas Price: ரக்ஷாபந்தன், ஓணம் பண்டிகைக்கு மத்திய அரசின் பம்பர் பரிசு: கேஸ் சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பு!

ஜி20 உச்சிமாநாட்டின் முதன்மை அமர்வு தவிர வெளிநாட்டு பிரதிநிதிகள் ராஜ்காட், ஐஏஆர்ஐ பூசா மற்றும் என்ஜிஎம்ஏ (ஜெய்ப்பூர் ஹவுஸ்) போன்ற டெல்லியில் உள்ள மற்ற முக்கிய இடங்களையும் பார்வையிட உள்ளனர்.

ஜி20 உச்சிமாநாட்டின் முழு அட்டவணை


** செப்டம்பர் 3-6 ஆகிய தேதிகளில் 4ஆவது ஷெர்பா கூட்டம் நடைபெறவுள்ளது
** செப்டம்பர் 5-6: நிதி பிரதிநிதிகள் கூட்டம்
** செப்டம்பர் 6: கூட்டு தலைவர்கள் (ஷெர்பாக்கள்) மற்றும் நிதி பிரதிநிதிகள் கூட்டம்
** செப்டம்பர் 9 - 10: ஜி20 உச்சி மாநாட்டில் அமைச்சர்களின் சந்திப்பு முதன்மை அமர்வு கூட்டம்
** செப்டம்பர் 13-14: வாரணாசியில் 4ஆவது நிதி பணிக்குழு கூட்டம்
** செப்டம்பர் 14 - 16: மும்பையில் நிதிச் சேர்க்கைக்கான உலகளாவிய கூட்டாண்மைக்கான 4ஆவது கூட்டம்
** செப்டம்பர் 18 - 19: ராய்பூரில் 4ஆவது கட்டமைப்பு பணிக்குழு கூட்டம்

ஜி20 உச்சிமாநாடு 2023: லோகோ


ஜி20 லோகோ மூவர்ண கொடியின் நிறத்தை கொண்டுள்ளது. தாமரை மலர் மீது பூமிப்பந்து இருப்பது போன்று லோகோ அமைக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால் உயிர்கள், உடைமைகள் மற்றும் வளங்கள் கடுமையாக பாதிக்கப்படும் நேரத்தில், லோகோவில் உள்ள பூமி சுற்றுச்சூழல் உணர்வுள்ள அணுகுமுறையைத் தேர்ந்தெடுப்பதற்கான அவசரத்தை நினைவூட்டுகிறது. ஜி20 லோகோவிற்கு கீழே, 'பாரத்' என்று தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்டுள்ளது.

ஜி20 உச்சி மாநாடு 2023: கருப்பொருள்


‘ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்.’ என்பது ஜி20க்கன கருப்பொருளாக உள்ளது. உலகளாவிய ஒற்றுமையின் செய்தியை இந்த கருப்பொருள் வழங்குகிறது. வாழ்க்கையின் கருத்தை உயர்த்தி காட்டுவதுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான பொறுப்புகளை குறிக்கிறது. தனிநபர் மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் இதற்கான பொறுப்புகள் இருக்க வேண்டும் என்பதை குறிக்கிறது.

click me!