Latest Videos

G20 நாடுகளுக்கான பொருளாதார அமைச்சர்கள் கூட்டம்.. ஆதார் முதல் மொபைல் போன் வரை - பிரதமர் மோடியின் உரை இதோ!

By Ansgar RFirst Published Aug 19, 2023, 12:04 PM IST
Highlights

பெங்களுருவில் இன்று நடைபெற்ற ஜி20 டிஜிட்டல் பொருளாதார அமைச்சர்கள் கூட்டத்தில், இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி வீடியோ கால் மூலம் அனைவரின் மத்தியில் உரையாற்றினார். அதில் அவர் கூறிய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இதோ!

இந்த பொருளாதார அமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோரின் தாயகமான பெங்களூரு நகருக்கு அனைத்து பிரமுகர்களை வரவேற்று, டிஜிட்டல் பொருளாதாரம் பற்றி விவாதிக்க இதைவிட சிறந்த இடம் எதுவும் இருக்க முடியாது என்று கூறி தனது உரையை துவங்கினர். 

டிஜிட்டல் இந்தியா
 
கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள டிஜிட்டல் மாற்றத்திற்காக, கடந்த 2015ம் ஆண்டில் டிஜிட்டல் இந்தியா முன்முயற்சி தொடங்கப்பட்டதற்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். இந்தியாவின் டிஜிட்டல் மாற்றம் புதுமையின் மீதான அதன் அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் விரைவாக செயல்படுத்துவதற்கான அதன் அர்ப்பணிப்பு ஆகியவற்றால் இயக்கப்படுகிறது என்று அவர் கூறினார். 

Home Loan : வீட்டுக் கடன் அதிகரிப்பு.. இந்த 8 நகரங்களில் சொத்து விலை பல மடங்கு உயர்வு - எங்கெல்லாம் தெரியுமா?

இந்தியாவில் உள்ள 850 மில்லியன் இணைய பயனர்கள் உலகின் மிக மலிவான டேட்டா சேவைகளை அனுபவிக்கிறார்கள் என்று குறிப்பிட்டார். நிர்வாகத்தை மாற்றியமைப்பதற்கும், அதை மிகவும் திறமையாகவும், வேகமாகவும், வெளிப்படைத்தன்மையுடயதாக மாற்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைத் சுட்டிக்காட்டிய மோடி, 1.3 பில்லியனுக்கும் அதிகமான மக்களை உள்ளடக்கிய இந்தியாவின் தனித்துவமான டிஜிட்டல் அடையாளத் தளமான ஆதார் பற்றியும் அவர் பேசினார்.

ஆதார் மற்றும் UPI 

JAM ட்ரினிட்டி- ஜன்தன் வங்கிக் கணக்குகள், ஆதார் மற்றும் மொபைல் போன் தயாரிப்பில் இரண்டாம் இடம் ஆகியவற்றைக் குறிப்பிட்டார். ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 10 பில்லியன் பரிவர்த்தனைகள் நடைபெறும் UPI கட்டண முறை மற்றும் உலகளாவிய நிகழ்நேர கொடுப்பனவுகளில் 45% இந்தியாவில் தான் நடக்கிறது என்று பெருமிதத்தோடு கூறினார். இந்தியாவின் கோவிட் தடுப்பூசி இயக்கத்தை ஆதரித்த CoWIN போர்ட்டலைப் பற்றி குறிப்பிடுகையில், டிஜிட்டல் முறையில் சரிபார்க்கக்கூடிய சான்றிதழ்களுடன் 2 பில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்களை வழங்க இது உதவியது என்று பிரதமர் தெரிவித்தார்.

அனைத்தும் மின்மயமாகியுள்ளதால் எல்லா அரசாங்க நிலகழ்வுகளிலும் வெளிப்படைத்தன்மை இருப்பதாக கூறிய பிரதமர், மின்னணு வர்த்தகத்தை ஜனநாயகப்படுத்தும் டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த வலையமைப்பு ஆகியவற்றை குறித்தும் எடுத்துரைத்தார். "முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட வரிவிதிப்பு முறைகள் வெளிப்படைத்தன்மை மற்றும் மின்-ஆளுமையை ஊக்குவிக்கின்றன" என்று அவர் மேலும் கூறினார். இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் டிஜிட்டல் சேர்க்கையை ஆதரிக்கும் AI மூலம் இயங்கும் மொழி மொழிபெயர்ப்பு தளமான பாஷினியின் வளர்ச்சியையும் பிரதமர் எடுத்துரைத்தார். 

பன்முகத்தன்மை கொண்ட இந்தியா 

இந்திய நாட்டின் நம்பமுடியாத பன்முகத்தன்மையைக் குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவில் பல மொழிகள் மற்றும் நூற்றுக்கணக்கான பேச்சுவழக்குகள் உள்ளன என்பதை சுட்டிக்காட்டினார். உலகெங்கிலும் உள்ள அனைத்து மதங்களுக்கும், எண்ணற்ற கலாச்சார நடைமுறைகளுக்கும் இது தாயகமாக இருப்பதாக அவர் மேலும் கூறினார். 

"பண்டைய மரபுகள் முதல் சமீபத்திய தொழில்நுட்பங்கள் வரை, இந்தியா அனைவருக்காகவும் ஏதோவொன்றைக் கொண்டுள்ளது" என்று பிரதமர் கூறினார். மேலும் இந்தியாவில் வெற்றிபெறும் ஒரு விஷயத்தை உலகில் எங்கு வேண்டுமானாலும் எளிதாகப் பயன்படுத்த முடியும் என்று அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். இந்தியா தனது அனுபவங்களை உலகத்துடன் பகிர்ந்து கொள்ளத் தயாராக உள்ளது என்பதைத் தெளிவுபடுத்திய பிரதமர், கோவிட் தொற்றுநோய்களின் போது உலகளாவிய நன்மைக்காக வழங்கப்படும் CoWIN தளத்தின் உதாரணத்தையும் கூறினார்.

G20 மெய்நிகர் உலகளாவிய டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு களஞ்சியத்தை உருவாக்கி வருவதாக பிரதமர் தெரிவித்தார், மேலும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பிற்கான பொதுவான கட்டமைப்பின் முன்னேற்றம் அனைவருக்கும் வெளிப்படையான, பொறுப்புணர்வு மற்றும் நியாயமான டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க உதவும் என்று கூறினார். 

டிஜிட்டல் திறன்களை கிராஸ் கன்ட்ரி ஒப்பீடு செய்வதற்கும், டிஜிட்டல் திறன் குறித்த மெய்நிகர் மையத்தை அமைப்பதற்கும் வசதியாக ஒரு சாலை வரைபடத்தை உருவாக் எடுக்கப்படும் முயற்சிகளையும் அவர் வரவேற்றார். எதிர்காலத்தில் செயலாற்ற தயாராக இருக்கும் பணியாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான முக்கியமான முயற்சிகளில் இவை என்று அவர் கூறினார். 

டிஜிட்டல் பொருளாதாரம் உலகளாவிய ரீதியில் பரவுவதால் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என்று குறிப்பிட்ட பிரதமர், பாதுகாப்பான, நம்பகமான டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான G20 உயர்மட்டக் கொள்கைகளில் ஒருமித்த கருத்தை உருவாக்குவது முக்கியம் என்று சுட்டிக்காட்டினார்.

தனிநபர் கடன்.. கல்விக்கடன்.. 2 மாத சம்பளத்தை முன்பே பெற டக்கர் ஐடியா - SBI வங்கியில் உள்ள சூப்பர் திட்டம்!

click me!