முதல்வரின் "வெள்ள நிவாரண நிதிக்கு" இதுவரை இத்தனை கோடி கிடைத்துள்ளதாம்..!

By thenmozhi gFirst Published Aug 21, 2018, 7:05 PM IST
Highlights

முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.210 கோடி கிடைத்துள்ளது என்று கேரள மாநில  முதல்வர் பினராயி விஜயன் தகவல் தெரிவித்து உள்ளார். 
 

முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.210 கோடி கிடைத்துள்ளது என்று கேரள மாநில  முதல்வர் பினராயி விஜயன் தகவல் தெரிவித்து உள்ளார். 

தென்மேற்கு பருவ மழை காரணமாக தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக கேரளாவில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக, 380 கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். பலர் வீடுகள் இழந்து தவித்து வருகின்றனர். பலர் மாயமாகி உள்ளனர். பல்வேறு நபர்கள் பல முகாம்களில் தங்க  வைக்கப்பட்டு உள்ளனர்.

வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவ உலகம் முழுவதிலிருந்தும் இருந்து பல்வேறு  தரப்பினர் உதவி கரம் நீட்டி வருகின்றனர்.தனி நபராகவும், ஒரு குழுவாகவும், ஒரு நிறுவனம் சார்ந்தும் தொடர்ந்து அவர்களுக்கு தேவையான  நிவாரண தொகை மற்றும் பொருட்களை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் எவ்வளவு நிதி கொடுக்கப்பட்டு உள்ளது என்பதை கேரள மாநில முதலவர் பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார். அதன்படி, ரூ.87 கோடிக்கும் மேலாக ஆன்லைன் போர்டல் மூலம் கிடைத்துள்ளது  என்றும், அதுமட்டும் இல்லாமல் ரூ.160 கோடி நிதியுதவி வழங்குவதற்கான ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் கூறியுள்ளார்.இது தவிர்த்து தொடர்ந்து, கேரள மக்களுக்கு வெள்ள நிவாரண நிதியை மக்கள் தொடர்ந்து வழங்கிய  வண்ணம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!