ஆசிரியர்கள் வெறுமனே பயிற்றுவிப்பாளர்களாக அன்றி, வித்வானாக மாற வேண்டும் என்கிறார் ஃபுல்பிரைட் ரமீஸ் சுதன்!

Published : Jun 19, 2023, 02:32 PM IST
ஆசிரியர்கள் வெறுமனே பயிற்றுவிப்பாளர்களாக அன்றி, வித்வானாக மாற வேண்டும் என்கிறார் ஃபுல்பிரைட்  ரமீஸ் சுதன்!

சுருக்கம்

2016-ம் ஆண்டில், காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் உள்ள ஒரு அரசுப் பள்ளியின் ஆசிரியராக இருந்தார் ரமீஸ் சுதன். தனது மாணவர்களின் பெற்றோரை அணுகி, அவர்களின் வார்டுகளின் முன்னேற்றத்தைப் பற்றி விவாதிக்க பெற்றோர்-ஆசிரியர் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். ஒரு பெரிய புரட்சிகர மாற்றத்திற்கு தான் அடிக்கோடிடுவதாக ​​அவர் நினைக்கவில்லை.

2016-ம் ஆண்டில், காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் உள்ள ஒரு அரசுப் பள்ளியின் ஆசிரியராக இருந்தார் ரமீஸ் சுதன். தனது மாணவர்களின் பெற்றோரை அணுகி, அவர்களின் வார்டுகளின் முன்னேற்றத்தைப் பற்றி விவாதிக்க பெற்றோர்-ஆசிரியர் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். ஒரு பெரிய புரட்சிகர மாற்றத்திற்கு தான் அடிக்கோடிடுவதாக ​​அவர் நினைக்கவில்லை.

பின் நாளில், அவர் கொண்டு வந்த வேறுபாடுகள் அரசாங்கத்தால் நடத்தப்படும் பள்ளிகளில், ஒரு புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், 2023-ல் ஃபுல்பிரைட் ஸ்காலர்ஷிப் பெறும் ஒரே இந்தியராக ரமீஸ் சுதன் ஆவதற்கும் வழிவகுத்து.

ரமீஸ் சுதன், தனது ஸ்கார்ஷிப் காலத்தில், அவர் சுமார ஐம்பது வெவ்வேறு நாடுகளில் இருந்து ஆசிரியர் சமூகத்துடன் தொடர்பு கொண்டார். அப்போது, காஷ்மீரில் தான் ஆசிரியராக இருந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். மற்றும் பிற நாடுகளில் உள்ள ஆசிரியர்களின் அனுபவத்தையும் கேட்டறிந்தார்.

ஃபுல்பிரைட் ஸ்காலர்ஷிப் (Fulbright scholarship) என்பது தானாக அவர் மடியில் விழுந்தது அல்ல. காஷ்மீரில் மிகவும் கடினமான கால கட்டத்தில் அரசுப் பள்ளிகள், மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு ஆலோசனை வழங்குவது பற்றிய பார்வையை மாற்றுவதில் ஆசிரியர் ரமீஸ் சுதன் எடுத்த முயற்சிகள் அவரை அவரது சக ஆசிரியர்கள் மத்தியில் தனித்துவமாக்கியது.



ஆசிரியர் சுதன் கற்பித்த பிராந்தியத்தில், இளைஞர்கள் தங்கள் வயதை இழந்ததற்கான முக்கிய நிகழ்வுகளில் ஒன்று இளம் பயங்கரவாதி புர்ஹான் வானி கொல்லப்பட்டது தான். இந்த சம்பவம் ஏராளமான இளைஞர்களை மனரீதியாக தொந்தரவு செய்தது. ஒரு ஆசிரியராக பாதிக்கப்பட்ட இளைஞர்களை சரியான பாதையில் கொண்டு வர வேண்டும்," என்கிறார் சுதன்.

ஆசிரியர் சுதன், தனது வழக்கமான பாடங்களை கற்பிப்பதோடு மட்டுமல்லாமல், மன அதிர்ச்சி, பள்ளி பாதுகாப்பு மற்றும் இடர் குறைப்பு குறித்து மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். காஷ்மீரில் ஏற்படும் எதிர்மறை நிகழ்வுகளுக்கு யாரும் பொறுப்பேற்க தயாராக இல்லாத நிலையில், ஆசிரியர் சுதன் பொறுப்பேற்க முடிவு செய்தார். தன் மாணவர்களின் கைகளை பிடித்துக்கொண்டு, தொடர்ந்து அவர்களது பெற்றோரை அணுகுவதன் மூலம் பார்வையை மாற்ற முடியும் என்று எண்ணினார். இடர்பாடுகளில் சிக்கி வயதை தொலைக்கும் மாணவர்களை மீட்டு நல்வழிப்படுத்தினார்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிக்கு மாற்றத் துவங்கியது, சுதன் கற்பித்துக் கொண்டிருந்தது அவர் மேற்கொண்ட முயற்சிக்கு கிடைத்த மரியாதையாகும்.

"பெற்றோரின் ஈடுபாடு முக்கியமானது. வன்முறைக்கு பெயர் போன பகுதி. குழந்தைப் பருவம் தொலைந்து போகிறது,” என்று சுதன் தன் முயற்சிகளை ஒரு படியிலிருந்து இன்னொரு படிக்கு அழைத்துச் சென்றதை விவரிக்கிறார். “நாட்டின் பிற பகுதிகளில் உள்ள ஆசிரியர்களை விட காஷ்மீரில் உள்ள குழந்தைகள் அதிக மன அழுத்தத்தில் உள்ளனர் என்றார். பள்ளிகள் நீண்ட காலத்திற்கு மூடப்பட்டன. குழந்தைகள் வன்முறை மற்றும் நிச்சயமற்ற தன்மைக்கு ஆளாகினர்," என்று அவர் மேலும் விவரிக்கிறார்.



எனது சிந்தனை மற்றும் செயல் மிகக் குறைந்த அளவில் இருந்த நேரத்தில் ஃபுல்பிரைட் ஸ்காலர்ஷிப் வந்தது என்கிறார் சுதன். பின் மாற்றங்கள் நிகழ்ந்தன, ஆனால் அவர் தனது பள்ளியில் விஷயங்களை மேலும் வேகமாக மாற்ற விரும்பினார். "இந்த அமைப்பு ஊக்குவிக்கவில்லை, ஆசிரியராக எனது பயணத்திற்கு ஒரு புதிய அர்த்தத்தை தர விரும்பினார்.

ஆசிரியர் சுதன், இரண்டு மாத கால ஸ்காலர்ஷிப் காலத்திலிருந்து திரும்பி வந்துள்ளார். "மற்ற நாடுகளைச் சேர்ந்த ஆசிரியர்களிடமிருந்து தான் நிறைய கற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார். ஸ்காலர்ஷிப் திட்டத்தின் ஒரு பகுதியாக ஒரு அமெரிக்கப் பள்ளியில் கற்பித்ததை, இந்தியாவிலும் குறிப்பாக காஷ்மீர் பள்ளத்தாக்கிலும் உள்ள ஆசிரியர்கள் எவ்வாறு தொழிலைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பது பற்றிய பரந்த எல்லையை தனக்கு புரியவைத்துள்ளதாக தெரிவித்துளார்.

கல்விக்காக தன் வாழ்வை அர்ப்பணிப்பதாக உறுதியளித்துள்ளார். “எங்கள் குழந்தைகள் அனைவரும் உணர்வுபூர்வமாக பாதுகாப்பாக இருக்க உதவுவோம் என்கிறார். குழந்தைகளை நல்வழிநடத்தும், ஆசிரியர்களை விட பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை முன்னோக்கி அழைத்துச் செல்வதில் பங்கு வகிக்கிறார்கள் என்கிறார் ஆசிரியர்.

மேலும், காஷ்மீரின் நிலைமை மாறவேண்டுமெனில், ஆசிரியர்கள் வெறுமன பயிற்றுவிப்பாளர்களாக அன்றி, சகலகலா வித்வானாக வேண்டும் என்கிறார் ஆசிரியர் ரமீஸ் சுதன்!

PREV
click me!

Recommended Stories

IndiGo பயணிகளுக்கு ஷாக் கொடுத்த CEO.. இன்னும் 10 நாளைக்கு இது தான் கண்டிஷன்..!
Bus fares: விமானத்தில் மட்டுல்ல இனி பேருந்திலும் போக முடியாது போல.! பிளைட் டிக்கெட் ரேட்டிற்கு உயர்ந்த பேருந்து கட்டணம்.!