திருப்பதியில் இனி இலவச லட்டு..! தேவஸ்தானம் அதிரடி..!

By Manikandan S R S  |  First Published Jan 21, 2020, 10:28 AM IST

திருப்பதியில் அனைத்து பக்தர்களுக்கும் இனி இலவச லட்டு வழங்கப்படுகிறது.


ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருக்கும் ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் தினமும் தரிசனத்திற்கு வருகின்றனர். இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் காணிக்கையாக நகை, பணம் என ஏராளமாக உண்டியலில் செலுத்துகின்றனர்.

Latest Videos

undefined

திருப்பதியில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. மலைப்பாதை வழியாக நடந்து மலையேறி வரும் பக்தர்களுக்கு இலவசமாக 1 லட்டு வழங்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகிகள் கூட்டத்தில் அனைத்து பக்தர்களுக்கும் இலவச லட்டு வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. அதன்படி திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் இனி ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது.

இலவச தரிசனம்,திவ்ய தரிசனம், சர்வ தரிசனம் என அனைத்து வழிகளில் வரும் பக்தர்களுக்கும் லட்டு பிரசாதம் இலவசமாக வழங்கப்படும். கூடுதலாக லட்டு பிரசாதம் தேவைப்படுவோர் 50 ரூபாய் கொடுத்து கோவிலுக்கு வெளியே இருக்கும் கவுண்டர்களில் வாங்கிக்கொள்ளலாம். இதற்காக தனியாக 12 கவுண்டர்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.

Also Read: ஒரே நாளில் இருமுறை ஹரிவராசனம்..! சபரிமலையில் நடந்த அபூர்வ நிகழ்வு..!

click me!