உத்தரபிரதேசத்தில் இலவச உணவகம்…நாளை தொடங்கி வைக்கிறார் யோகி ஆதித்யநாத்…

 
Published : Aug 08, 2017, 07:55 AM ISTUpdated : Sep 19, 2018, 12:59 AM IST
உத்தரபிரதேசத்தில் இலவச உணவகம்…நாளை தொடங்கி வைக்கிறார் யோகி ஆதித்யநாத்…

சுருக்கம்

free hotel in sahanpur . uttarapredesh

உத்திரபிரதேச மாநிலம் சஹாரன்பூரில் நாளை  இலவச உணவகம் துவக்கப்பட உள்ளது. முதலமைச்சர்  யோகி ஆதித்யநாத் தொடங்கி வைக்கிறார். இந்த உணவகத்துக்கு பிரபு கீ ரசோய்  அதாவது கடவுளின் சமையலறை என பெயரிடப்பட்டுள்ளது.

மறைந்த முதலமைச்சர்  ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட அம்மா உணவகத்தில் மலிவு விலையில் உணவு வழங்கப்படுகிறது. இந்த திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்று மற்ற மாநிலங்களிலும் பல்வேறு பெயர்களில் தொடங்கப்பட்டன.

இந்த நிலையில் அம்மா உணவகத்தை மிஞ்சும் வகையில் உத்தரபிரதேச மாநிலத்தில் இலவச உணவகம் நாளை தொடங்கப்படுகிறது. சோதனை அடிப்படையில் உத்தரபிரதேச மாநிலம்  சஹாரன்பூரில் இலவச உணவகம்  நாளை தொடங்கப்படுகிறது.

தனியார் நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் அளிக்கும் நன்கொடை உதவியால் நாள்தோறும்  300 பேருக்கு இலவச உணவு அளிக்கப்பட இருக்கிறது. இந்த உணவகத்தை நிர்வகிப்பதற்காக அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கொண்ட 300 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து  செய்தியாளர்களிடம் பேசும் போது சகான்பூர் அரசு அதிகாரி தமிழகத்தில் அம்மா உணவகத்தை மிஞ்சும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது  என தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

காங்கிரஸ்க்கு கிரீன் சிக்னல் கொடுத்த விஜய்..? போனிலேயே நடந்து முடிந்த டீல்.. கலக்கத்தில் திமுக
இடைவெளி விடுங்கள்.. EMI கட்ட வேண்டியுள்ளது.. வைரலாகும் காரின் பின்புறம் ஓட்டப்பட்ட ஸ்டிக்கர்..